பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் 5 போக்குவரத்து செயலிகள். என்னென்ன என்பதை காணலாம்.
சென்னையில் மாநகரப் பேருந்துகள் இயங்கும் இடம், வரும் நேரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ளும் விதமாக 'சென்னை பஸ்' என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம், பேருந்தில் பயணம் செய்யவிருப்போர் தங்கள் இருப்பிடத்தின் அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம், நிறுத்தத்திற்கு வந்துகொண்டிருக்கும் பேருந்துகளின் விவரம் ஆகியவற்றை உடனடியாக அறியலாம்.
இந்த செயலி மூலம், பேருந்து நிறுத்தம், நிறுத்தத்திற்கு வந்துகொண்டிருக்கும் பேருந்துகளின் விவரம் குறித்து அறியலாம். பயணிகளால் இந்த ஆப் மூலம் பேருந்துகளின் இயக்கத்தை நேரடியாக கண்காணிக்க முடியும்.
மும்பையை தளமாகக் கொண்ட, Chalo செயலி ஒரு இலவச நேரலை பேருந்து கண்காணிப்பு பயன்பாடாகும்.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பேருந்து எந்த இடத்தில் வந்துக்கொண்டிருக்கிறது, எவ்வளவு நேரத்தில் வரும் என்பதை பார்த்துக் கொள்ள முடியும்.
தற்போது இந்த செயலி நாடு முழுவது 23 நகரங்களில் பயன்பாட்டில் உள்ளது. இது பயணிகளை பேருந்துகளை நேரடியாக கண்காணிக்க மற்றும் ஆன்லைன் பஸ் பாஸ் பெறுதல் ஆகியவற்றிருக்கு அனுமதிக்கிறது.
சென்னை சாலை போக்குவரத்து நெருக்கடியை கண்டறிந்து மாற்று சாலையை பயன்படுத்த இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியானது கூகுள் மேப் உதவியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
15 நிமிடத்திற்கு ஒரு முறை இந்த செயலி அப்டேட் ஆகும் வசதிகொண்டது. இந்த செயலியில் எந்த இடத்திலிருந்து எந்த இடம் வரை எவ்வளவு நேரம் போக்குவரத்து மாற்றம், சாலை முடக்கம் ஏற்பட்டுள்ளது என தெரிந்துக்கொள்ளலாம்
பிரபல பேருந்து முன்பதிவு தளமான Redbus ஆனது IRCTC உடன் இணைந்து Redrail என்ற புதுப்பிப்பைக் கொண்டு வந்துள்ளது. இப்போது அதே செயலி மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
Redrail அறிமுகத்திற்குப் பிறகு, பயணிகள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய இதனை பயன்படுத்துகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust