காதலர் தினம் : காதலிக்கு பரிசு வாங்க ஆடு திருடிய காதலன், 2 பேர் கைது - எங்கே?

காதலர் தினத்தையொட்டி காதலிக்கு பரிசு வாங்குவதற்கு பணம் இல்லாததால் ஆடு திருட்டு செயலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காதலிக்கு பரிசு வாங்க ஆடு திருடிய காதலன்
காதலிக்கு பரிசு வாங்க ஆடு திருடிய காதலன்Twitter
Published on

உலக முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

காதலிப்பவர்கள் பரிசுப்பொருட்கள், கேண்டில் லைட் டின்னர், வாழ்த்துகள் என அந்த தினத்தில் காதலை வெளிப்படுத்துவார்கள்.

காதலர் தினத்தில் காதலன், காதலி தங்கள் அன்புக்குரியவர்களுக்கு சிறப்பு பரிசுகளை கொடுத்து அதை மறக்க முடியாத நாளாக மாற்றுவது வழக்கம்.

goat
goat twitter

இந்த நிலையில் காதலர் தினத்தையொட்டி காதலிக்கு பரிசு வாங்குவதற்கு பணம் இல்லாததால் ஆடு திருட்டு செயலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பீரங்கி மேடு மலையரசன் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த் குமார் (20). கல்லூரி மாணவரான இவரும், அவரது நண்பரான கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன் (20) என்பவரும் இன்று அதிகாலை ஆட்டுப்பட்டியில் இருந்து ஆடு ஒன்றினை இருசக்கர வாகனத்தில் திருடிக் கொண்டுசெல்வதை அங்கு இருந்த ஆடு உரிமையாளர் பார்த்து கூச்சலிட்டுள்ளார்.

காதலிக்கு பரிசு வாங்க ஆடு திருடிய காதலன்
Valentine's Day: எந்தெந்த நாடுகளில் காதலர் தினத்துக்கு தடை?

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆட்டினை திருடிய இளைஞர்களை விரட்டி பிடித்தனர். பின்னர் கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்

தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அரவிந்த்குமார் காதலர் தினத்தை கொண்டாடவும், காதலிக்கு பரிசு வாங்குவதற்கும் பணம் இல்லாததால் ஆட்டினை திருடியதாக தெரிவித்துள்ளனர்.

ஆடு திருட உடந்தையாக அவரது நண்பர் மோகன் செயல்பட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும், திருட்டுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்னர்.

காதலிக்கு பரிசு வாங்க ஆடு திருடிய காதலன்
காதலர் தினம் : ஏன் கொண்டாடப்படுகிறது? - ஓஹோ இதுதான் வரலாறா!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com