காதலர் தினம் : ஏன் கொண்டாடப்படுகிறது? - ஓஹோ இதுதான் வரலாறா!

உலகின் சில பகுதிகளில், காதலர்கள், தம்பதியினரை தாண்டி குடும்பத்தில் உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடையே அன்பை வெளிப்படுத்தும் ஒரு நாளாக காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
History of Valentine's Day and Why We Celebrate It
History of Valentine's Day and Why We Celebrate ItTwitter
Published on

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வந்ததுமே நினைவுக்கு வருவது காதலர் தினம் தான். காதலிப்பவர்கள் காதலர் தினத்தன்று தங்களது காதலை தெரிவிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

பரிசுப்பொருட்கள், கேண்டில் லைட் டின்னர், வாழ்த்துகள் என அந்த தினத்தில் காதலை வெளிப்படுத்துவார்கள். ரோமானிய அரசின் ஆட்சிக்காலத்தில் தான் காதலர் தின கொண்டாட்டம் துவங்கியதற்கான சான்றுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த தினத்தின் பின்னால் இருக்கும் வரலாறு குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.

ஏன் கொண்டாடப்படுகிறது?

ரோமில் வாழ்ந்த கத்தோலிக் மதகுருவான செயிண்ட் வாலண்டைனின் பெயரால் காதலர் தினம் அழைக்கப்படுகிறது.

ரோம் நகரத்து வசந்தகால பண்டிகை தான் லூபர்கலியா. பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 15 வரை ரோமானியர்கள் இந்த பண்டிகையை கொண்டாடினர். இதில் ஆண்களும் பெண்களும் இணைந்து கலந்துக் கொண்டனர்.

ஒரு குவளையில் இருக்கும் பெண் பெயரை தேர்ந்தெடுத்து தங்களது காதலை ஆண்கள் வெளிப்படுத்துவர். சில சமயங்களில் இது திருமணமாக மாறும் என்று கூறப்படுகிறது.

ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்ய தடை இருந்திருக்கிறது. அப்படி திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்ற கருத்து பரவலாக இருந்திருக்கிறது.

அந்த சமயத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைப்பட்ட ஆண்களுக்கு வேலண்டைன் என்ற பாதிரியார் உதவியிருக்கிறார்.

ரோம் நகரில் வாழ்ந்த ஆண்களின் வாழ்வு போரில் முடிவடையக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு, அரசர் கிளாடியஸ் கட்டளைகளை மீறி, இளம் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

மன்னனுக்கு இந்த விஷயம் தெரிய வந்தபோது வேலண்டைனைப் பிடித்து மரண தண்டனை விதித்தார். அவர் கொல்லப்பட்ட நாள் தான் பிப்ரவரி 14. இது நடந்தது கி.பி 270. இந்த நாள் வேலண்டைன் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வேலண்டைன்ஸ் டே வாழ்த்துகள் 16ஆம் நூற்றாண்டிலிருந்து மக்கள் மத்தியில் கூறப்பட்டு வருகிறது என்றும், 18ம் நூற்றாண்டில் இருந்து வாழ்த்து அட்டைகள் பகிர்ந்து கொள்ளுதலும் பழக்கத்திற்கு வந்தது என்றும் வரலாற்று தகவல்கள் நமக்கு கிடைக்கிறது.

பெரும்பாலான நாடுகளில் காதலர் தினம் காதலை வெளிப்படுத்த மட்டும் கொண்டாடப்பட்டாலும், இந்த தினத்தை தங்களது, கலாச்சாரங்களுக்கு ஏற்றவாறு மாற்றி கொண்டாடி வருகின்றனர்.

உலகின் சில பகுதிகளில், காதலர்கள், தம்பதியினரை தாண்டி குடும்பத்தில் உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடையே அன்பை வெளிப்படுத்தும் ஒரு நாளாக காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

வாலன்டைன் டே வாரம்

ரோஸ் டே : பிப்ரவரி-7

தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு ரோஜாவைக் கொடுத்து ஒருவர் தன் அன்பை வெளிப்படுத்தும் நாள்.

ப்ரப்போஸ் டே : பிப்ரவரி-8

மனதுக்கு நெருக்கமானவரிடம் ”உலகமே நீதான்” என்று தங்களது காதலை வெளிப்படுத்தும் நாள்

சாக்லேட் டே : பிப்ரவரி-9

இந்த நாளில் சாக்லேட் பரிசளித்து நமது அன்பை, பாசத்தை, அவர்களிடத்தில் வெளிப்படுத்தலாம்.

History of Valentine's Day and Why We Celebrate It
Madras day : ஏன் மெட்ராஸ் தினம் கொண்டாடப்படுகிறது? இதன் பின்னணி என்ன? - விரிவான தகவல்

டெடி டே : பிப்ரவரி-10

இந்த நாளில் டெடி பியர் பொம்மையைப் பிடித்தவர்களுக்குப் பரிசளித்து அன்பை வெளிப்படுத்தலாம்.

பிராமிஸ் டே : பிப்ரவரி-11

இந்த நாளுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. ”என்ன நடந்தாலும் உன்ன விட மாட்டேன்” என்று நமக்குப் பிடித்தவர்களிடம் இந்த உறவின் ஆழத்தை உறுதிப்படுத்தலாம்.

ஹக் டே : பிப்ரவரி-12

உங்கள் வாழ்க்கையின் முக்கியமானவர்களை அரவணைக்கும் நாள். இந்த நாளில் வாழ்க்கை துணை மட்டுமில்லாமல் நண்பர்களை, குடும்ப உறுப்பினர்கள் என்று அனைவரிடத்திலும் நீங்கள் உங்கள் அன்பை வெளிக்காட்டலாம்.

History of Valentine's Day and Why We Celebrate It
பெண்களின் லவ்வை கண்டுபிடிப்பது எப்படி? காதல் வந்துட்டா இப்படியெல்லாம் பண்ணுவாங்களா?

கிஸ் டே : பிப்ரவரி-13

முத்தம் அன்பின் வெளிப்பாடு. இந்த முத்த தினத்தில், தங்களின் நெருக்கமானவருக்கு முத்தம் கொடுத்து உங்கள் அன்பை வெளிப்படுத்தலாம்.

வேலண்டைன்ஸ் டே : பிப்ரவரி-14

ஏழு நாள் கொண்டாட்டத்தின் இறுதி நாள் இது. உலகில் அனைவராலும் கொண்டாடப்படுகிறது இந்த நாள்.

வேலண்டைனை நினைவு கூறும் வகையில் இந்த நாள் கொண்டாடப்பட்டாலும், காதலர்களுக்கு இந்த நாள் மிக முக்கியமான நாள். தங்கள் காதலை வெளிப்படுத்த இதுவே சரியான நாள் என்று நம்புகிறார்கள்.

History of Valentine's Day and Why We Celebrate It
Mars என்ற பெயர் ஏன் கொடுக்கப்பட்டது தெரியுமா? - செவ்வாய் கிரகம் பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com