Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்

மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்Twitter
Published on

நடிகரும் தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த சூழலில் நுரையீரல் பாதிப்புக்காக கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜய்காந்த்.

இதனையடுத்து விஜயகாந்த் குணமடைந்து கடந்த 11 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ பரிசோதனையில், விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். விஜயகாந்த் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த செய்தியறிந்த தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.

Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
விஜயகாந்தின் இடத்தை நிரப்புவாரா பிரேமலதா? ஓர் அரசியல் பார்வை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com