விஜயகாந்தின் இடத்தை நிரப்புவாரா பிரேமலதா? ஓர் அரசியல் பார்வை!

தேமுதிகவில் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள பிரேமலதாவால் எதாவது மாற்றத்தைக் கொண்டுவர முடியுமா? அந்த கட்சியில் அவரது பங்களிப்பு இதுவரை எப்படிப்பட்டதாக இருந்திருக்கிறது எனப் பார்க்கலாம்.
விஜயகாந்தின் இடத்தை நிரப்புவாரா பிரேமலதா? ஓர் அரசியல் பார்வை!
விஜயகாந்தின் இடத்தை நிரப்புவாரா பிரேமலதா? ஓர் அரசியல் பார்வை! Twitter

பிரேமலதா விஜயகாந்த் நேற்று தேமுதிகவின் பொதுச் செயலாளராக பதவியேற்றுக்கொண்டார். அந்த கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சரியில்லாததும், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதும் புதிய பொதுச் செயலாளர் மாற்றத்துக்கான காரணங்களாகக் கூறப்படுகிறது.

தேமுதிகவில் பொதுச் செயலாளர் பிரேமலதாவால் எதாவது மாற்றத்தைக் கொண்டுவர முடியுமா? அந்த கட்சியில் அவரது பங்களிப்பு இதுவரை எப்படிப்பட்டதாக இருந்திருக்கிறது எனப் பார்க்கலாம்.

பிரேமலதா விஜயகாந்த்

1969ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி பிறந்தவர் பிரேமலதா. இவர் கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம் படித்திருக்கிறார்.

விஜயகாந்த் திரைத்துறையில் உச்சகட்ட நடிகராக வளர்ந்து வந்த போது 1990 ஜனவரியில் அவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்தை நடத்தி வைத்தவர் கலைஞர் கருணாநிதி.

திருமணம் ஆனது முதலே விஜயகாந்தின் எல்லா காரியங்களிலும் பிரேமலதாவின் தலையீடு சிறிய அளவிலாவது இருந்திருக்கிறது. விஜயகாந்த் ரசிகர் மன்றத்தில் பங்கேற்பது, கல்லூரியைப் பார்த்துக்கொள்வது என பொது வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளார்.

2005ம் ஆண்டு தேமுதிக தொடங்கப்பட்ட போது ரசிகர்மன்ற நிர்வாகிகளே கட்சியில் முக்கிய பதவி வகித்தனர். 2009ம் ஆண்டு கட்சியின் முதல் பொதுச் செயலாளராக இருந்த ராமு வசந்தன் காலமானார்.

அதன் பிறகு விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஸின் ஆதிக்கம் கட்சியில் அதிகரித்தது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணி முறிவுக்கு பிறகு கட்சியில் இருந்து பலர் வெளியேறிய நிகழ்வுகளும் நடந்தன. உண்மையில் தேமுதிக என்ற கட்சி அப்போதே ஆட்டம் கண்டுவிட்டது.

விஜயகாந்தின் இடத்தை நிரப்புவாரா பிரேமலதா? ஓர் அரசியல் பார்வை!
பாஜக கூட்டணி விவகாரம் : அதிமுக உட்கட்சியில் முரண்பாடு - என்ன நடக்கிறது?

விஜய்காந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி 2016ல் தேர்தலை எதிர்கொண்டனர். இதில் பிரேமலதாவின் பிரச்சாரம் முக்கியத்துவம் பெற்றது.

ஆனால் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் கட்சி இன்னும் பலவீனமடைந்தது. கூடவே விஜயகாந்தின் உடல்நிலையும்.

கட்சி சார்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவது, கூட்டங்களுக்கு தலைமை தாங்குவது என அறிவிக்கப்படாத தலைவராகவே வலம்வரத் தொடங்கினார் பிரேமலதா விஜயகாந்த்.

விஜயகாந்தின் இடத்தை நிரப்புவாரா பிரேமலதா? ஓர் அரசியல் பார்வை!
ரெட் டி- சர்ட்டில் மாஸ் காட்டும் விஜயகாந்த்... மகன்களுடன் போஸ் கொடுத்த ஃபோட்டோஸ் வைரல்

2018ம் ஆண்டு கட்சியின் பொருளாளராக பதவியேற்றார். அதற்கு பிறகும் கட்சியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 2019, 2021 தேர்தல்களில் தேமுதிகவுக்கு படு தோல்விகளே மிஞ்சியது. அதே நிலைதான் பிரேமலதா பொதுச்செயலாளர் ஆனபிறகும் தொடரும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.

பிரேமலதாவின் முன்னிருக்கும் பணிகள் மிகப் பெரியது. எந்த முன்னணி கட்சியும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க முன்வரவில்லை. இந்த இடத்தில் இருந்து கட்சியைத் தூக்கி நிறுத்தும் சக்தி பிரேமலதாவுக்கு இருக்கிறதா என்பதைப் பொருத்திருந்து பார்ப்போம்.

விஜயகாந்தின் இடத்தை நிரப்புவாரா பிரேமலதா? ஓர் அரசியல் பார்வை!
விஜய் தேர்தலில் வெல்ல முடியுமா? அரசியலுக்கு வந்த நடிகர்களுக்கு என்ன ஆனது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com