”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

ஒரே நாடு, ஒரே பாடதிட்டங்கள், ஒரே தேர்வு இது அடிப்படையிலேயே கல்விக் கற்கும் நோக்கத்துக்கு எதிரானதாகவே பார்க்கிறேன். கல்வி என்பது அந்ததந்த மாநிலங்களுக்கு ஏற்றார்போல்தான் இருக்க வேண்டும். இதை மாநில உரிமைகளுக்காக மட்டும் பேசவில்லை.
”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” -  மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?
”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?instagram

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரண்டாம் கட்டமாக பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்துக்கொண்டுள்ளார். இந்த நிகழ்வில் நீட் தேர்வு குறித்து விஜய் பேசியிருக்கிறார்.

விஜய் பேசியதாவது, ``இன்று பேச வேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன் ஆனால், முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி பேசாமல் விட்டால் நன்றாக இருக்காது. அதுதான் நீட். தமிழ்நாட்டில் இருக்கும் மாணவ மாணவிகள், கிராமம்புறத்தில் இருக்கும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவிகள் இந்த நீட் தேர்வால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது சத்தியமான உண்மை. இந்த நீட் தேர்வை பொறுத்தவரை மூன்று பிரச்னைகள் முக்கியமானவை. அதில் முக்கியமானது நீட் மாநிலக் உரிமைக்கு எதிராக இருக்கிறது.

ஒரே நாடு, ஒரே பாடதிட்டங்கள், ஒரே தேர்வு இது அடிப்படையிலேயே கல்விக் கற்கும் நோக்கத்துக்கு எதிரானதாகவே பார்க்கிறேன். கல்வி என்பது அந்ததந்த மாநிலங்களுக்கு ஏற்றார்போல்தான் இருக்க வேண்டும். இதை மாநில உரிமைகளுக்காக மட்டும் பேசவில்லை. கல்வி முறையில் பல்வேறு கண்ணோட்டங்கள், பல்வேறு பார்வைகள் இருக்க வேண்டும். அதற்கான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

மாநில மொழியில், மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு, NCERT பாடத்திட்டத்தில் தேர்வு வைத்தால் அது எப்படி சரியாகும். அதுவும் கிராமப் புறத்தில் இருக்கும் மாணவ மாணவிகளுக்கு, குறிப்பாக மருத்துவத் துறை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு எவ்வளவு பெரிய கடினம் என்பதை யோசித்து பார்க்க வேண்டும். கடந்த மே மாதம் 5-ம் தேதி நடந்த தேர்வும், அதைத் தொடர்ந்து வெளிவந்த நீட் குளறுபடிகள் தொடர்பான செய்திகளையும் பார்த்தோம். அதற்குப் பிறகு நீட் தேர்வு மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை போய்விட்டது.

இதற்கான உடனடி தீர்வு, நீட் விலக்கு மட்டும்தான். நீட் விலக்குக் கோரி தமிழக சட்டமன்றம் கொண்டுவந்திருக்கும் தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இதற்கு ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல், தமிழ்நாட்டு மக்களின் மன உணர்வை புரிந்துகொண்டு, அதற்கு மதிப்பு கொடுத்து, இதை விரைவில் பரிசீலனை செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். கல்வி விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் தரப்பட வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள் என்றார்

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” -  மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?
Vijay: "நான் அரசியலுக்கு வந்த பின்..." - நிர்வாகிகளிடம் விஜய் பேசியது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com