கட்சிக் கொடியை தலைகீழாக ஏற்றிய நடிகை குஷ்பு - தொண்டர்கள் அதிருப்தி

பாஜகவின் தேசிய செயற்குழு சிறப்பு உறுப்பினர் குஷ்பு தலைகீழாகக் கொடியை ஏற்றியதால், கொடியிலிருந்த தாமரையின் இதழ்கள் கீழேயும் , மலர்க்காம்பு மேலே இருக்குமாறும் கொடி பறந்தது.
குஷ்பு
குஷ்புTwitter
Published on


பாஜக தொடக்க நாளில் நடிகை குஷ்பு தலைகீழாகக் கட்சிக் கொடியை ஏற்றியதைக் கண்டு நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தொடக்க நாளை முன்னிட்டு சென்னை தியாகராயநகரில் இரு இடங்களில் நடிகை குஷ்பு கட்சிக் கொடி ஏற்றினார். ஆரவாரத்துடன் நடந்த விழாவில் உற்சாகத்துடன் சற்று கவனக்குறைவால் நடிகை குஷ்பு டாக்டர் நரசிம்மன் சாலையில் பாஜக கொடியை தலைகீழாக ஏற்றி வைத்தார்.

கொடியேற்றிய குஷ்பு
கொடியேற்றிய குஷ்புTwitter

பாஜகவின் தேசிய செயற்குழு சிறப்பு உறுப்பினர் குஷ்பு தலைகீழாகக் கொடியை ஏற்றியதால், கொடியிலிருந்த தாமரையின் இதழ்கள் கீழேயும் , மலர்க்காம்பு மேலே இருக்குமாறும் கொடி பறந்தது.

தலைகீழாகப் பறந்த தாமரைச் சின்னத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள் , குஷ்பு அங்கிருந்து சென்றவுடன் உடனடியாக கொடியைக் கீழிறக்கிச் சரிசெய்து மீண்டும் ஏற்றி வைத்தனர். இதனால் அப்பகுதியில் நிர்வாகிகள் இடையே அதிருப்தியும், சற்று பரபரப்பும் நிலவியது.

குஷ்பு
டெல்லி குறித்து முதலைக் கண்ணீர் விடும் பாஜக – திரிணாமூல் எம்பி மொய்த்ரா விளாசல்

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com