உடைந்த ADMK - BJP கூட்டணி: நாடகமா? முடிவா? - திமுக, காங்கிரஸ் தலைவர்கள் சொல்வதென்ன?

"அண்ணாமலையை மாற்றினால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்."
உடைந்த கூட்டணி: நாடகமா? அரசியல் முடிவா? - திமுக, காங்கிரஸ் தலைவர்கள் சொல்வதென்ன?
உடைந்த கூட்டணி: நாடகமா? அரசியல் முடிவா? - திமுக, காங்கிரஸ் தலைவர்கள் சொல்வதென்ன?Twitter
Published on

அதிமுக பாஜகவுடனான கூட்டணி உறவை முறித்துக்கொண்டுள்ளது. "நன்றி மீண்டும் வராதீர்கள்" என்ற ஹேஷ்டேகுடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

இதுகுறித்து பேசிய திமுக தலைவர் டிகேஎஸ் இளங்கோவன், அதிமுக எதிரணியாகும் போது மத்திய அரசு அவர்களை குறிவைத்து தாக்கும் எனக் கூறியுள்ளார்.

"அமலாக்கத்துறை தங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் என நான் சொல்கிறேன். அதிமுகவினர் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், இவர்களை என்ன செய்வது என்று மத்திய அரசுக்குத் தெரியவில்லை. எனவே, அமலாக்கத் துறை தனது செயல்பாடுகளை தமிழகத்தில் விரிவுபடுத்தும். மத்திய அரசு எப்போதும் எதிர்க்கட்சிகளை குறிவைக்கிறார்கள். அ.தி.மு.க-வும் எதிர்க்கட்சியாகி விட்டதால், அவர்களை குறி வைப்பார்கள்... அண்ணாமலையின் பேச்சால்தான் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். அண்ணாமலையை மாற்றினால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்." என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் டிகேஎஸ் இளங்கோவன்.

மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லா எம்.ஹெச், "இந்த பிரிவு நிலையானது என நான் நினைக்கவில்லை. இது பாஜக தங்கள் மாநிலத்தலைவரை மாற்றி தங்களுக்கு இணக்கமான ஒருவரை அமர்த்த வேண்டும் என்பதற்காக அழுத்தம் கொடுக்கும் விதமாக அதிமுக செய்யும் சூழ்ச்சி. இதைத்தாண்டி அதிமுகவுக்கோ அதன் தலைவர்களுக்கோ என்றென்றைக்குமாக பாஜகவுடனான உறவை முறித்துக்கொள்ளும் தைரியம் கிடையாது" எனக் கூறியுள்ளார்.

உடைந்த கூட்டணி: நாடகமா? அரசியல் முடிவா? - திமுக, காங்கிரஸ் தலைவர்கள் சொல்வதென்ன?
பாரத் என்ற பெயர் மாற்றத்தை முன்பு எதிர்த்ததா பாஜக? விரிவான தகவல்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாக்கூர், "இது அந்த கட்சியின் அரசியல் முடிவு. நாங்கள் இதில் கருத்து சொல்ல முடியவில்லை. அதிமுக அமைச்சர்கள் ED மற்றும் CBI ரேடாரில் இருக்கின்றனர். என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்... NDA கூட்டணி என்பது காகித அளவில் மட்டுமே இருந்துவருகிறது. பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சேர்ந்து கடையை மூடிவிட்டனர். இப்போது என்.டி.ஏ ஒரு லெட்டர் போர்ட் அமைப்பு"

உடைந்த கூட்டணி: நாடகமா? அரசியல் முடிவா? - திமுக, காங்கிரஸ் தலைவர்கள் சொல்வதென்ன?
பாஜக கூட்டணி விவகாரம் : அதிமுக உட்கட்சியில் முரண்பாடு - என்ன நடக்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com