பாரத் என்ற பெயர் மாற்றத்தை முன்பு எதிர்த்ததா பாஜக? விரிவான தகவல்

இந்த பெயர்மாற்றத்துக்கு காரணம் இந்தியா கூட்டணி தான் என்பது எதிர்கட்சிகளின் வாதம். மேலும் முன்னர் ஒருமுறை நாட்டின் பெயரை பாரத் என மாற்றும் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது பாஜக அதனை ஆதரிக்காமல் சட்டமன்றத்தை விட்டு வெளியேரியதாகவும் கூறப்படுகிறது.
பாரத் என்ற பெயர் மாற்றத்தை முன்பு எதிர்த்ததா பாஜக? விரிவான தகவல்
பாரத் என்ற பெயர் மாற்றத்தை முன்பு எதிர்த்ததா பாஜக? விரிவான தகவல்Twitter

இந்திய நாட்டின் பெயரை பாரத் என மாற்றம் செய்வதில் பாஜக அரசு ஆர்வம் காட்டிவருவதைப் பார்க்க முடிகிறது. இது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

சில கட்சிகள் பாரத் என்ற பெயர்மாற்றத்துக்கு ஆதரவு தந்தாலும் சில கட்சிகள் இந்தியா என்ற பெயரே நிலைக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

ஜி20 மாநாட்டுக்கான குடியரசு தலைவரின் அழைப்பிதழில் பாரத் என குறிப்பிடப்பட்டிருந்தது. மாநாட்டில் பிரதமரின் இருக்கையில் பாரத் என எழுதப்பட்டிருந்தது.

நம் நாடு இந்தியா என்றும், பாரதம் என்றும் அறியப்பட்டாலும் பாரத் என்ற சொல் இப்போது திணிக்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த பெயர்மாற்றத்துக்கு காரணம் இந்தியா கூட்டணி தான் என்பது எதிர்கட்சிகளின் வாதம். மேலும் முன்னர் ஒருமுறை நாட்டின் பெயரை பாரத் என மாற்றும் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது பாஜக அதனை ஆதரிக்காமல் சட்டமன்றத்தை விட்டு வெளியேரியதாகவும் தகவல் வந்துள்ளது.

இந்தியா கூட்டணி

கடந்த 9 ஆண்டுகளாக பாஜக கட்சி இந்தியாவை ஆண்டு வருகிறது. இந்த ஆட்சியில் பல குழறுபடிகளை எதிர்கட்சிகள் முன்வைக்கின்றனர். சமீபத்தில் மணிப்பூர் பிரச்னை குறித்தும் பிரதமர் மோடி மௌனமாக இருப்பது கண்டனங்களை பெற்றுள்ளது.

பாஜக ஆட்சியை 2024 தேர்தலுடன் வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 26 கட்சிகள் இணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கின.

இந்த கூட்டணி பாட்னா, பெங்களூரு மற்றும் மும்பை நகரங்களில் முதல் 3 கூட்டங்களை நடத்தி தங்களது வலிமை மற்றும் ஒற்றுமையை நிரூபித்து வருகிறது.

ஆனால் இந்தியா கூட்டணி உடைந்துவிடும் என்றே பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் எண்ணி வருகின்றன. ஏனெனில் 2024ம் ஆண்டு பாஜகவை வீழ்த்துவது ஒரே இலக்காக இருந்தாலும் அடிப்படையில் இந்த கட்சிகள் முரண்பாடுகளைக் கொண்டுள்ளன.

உதாரணமாக "சனாதானத்தை ஒழிக்க வேண்டும்" என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை மம்தா பேனர்ஜி, அரவித் கேஜ்ரிவால் போன்ற தலைவர்கள் எதிர்த்தனர்.

Twitter

இந்தியா கூட்டணிக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவும் பாஜக தயங்கவில்லை. ஆரம்பத்தில் இந்தியா என்ற கூட்டணியின் பெயரை ஐ.என்.டி.ஐ.ஏ என்று அழைத்து வந்தனர்.

நாட்டின் பெயரை மாற்றிக் கூறுவதும் அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கை தான் என எதிர்கட்சியினர் கூறுகின்றனர்.

பாரத் என்ற பெயர் மாற்றத்தை முன்பு எதிர்த்ததா பாஜக? விரிவான தகவல்
இந்தியா: பாஜக ஆட்சியில் இருமடங்காக உயர்ந்த தனிநபர் வருமானம்- சாமானிய மக்களுக்கு என்ன பயன்?

முலாயம் சிங் யாதவ் தீர்மானம்!

2004ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றும் தீர்மானத்தை உத்தரபிரதேச சட்டமன்றத்தில் கொண்டுவந்தது முலாயம் சிங் யாதவின் அரசு.

அரசியலமைப்பு சட்டத்தில் "இந்தியா என்கிற பாரத் என்பதற்கு பதிலாக, பாரத் என்கிற இந்தியா" என மாற்ற வேண்டும் என முலாயம் சிங் வழிமொழிந்தார். ஆனால் அப்போது பாஜக எம்.எல்.ஏக்கள் இந்த தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்தனர்.

பாரத் என்ற பெயர் மாற்றத்தை முன்பு எதிர்த்ததா பாஜக? விரிவான தகவல்
"ஊழல் செய்ய 3 சட்டங்களை திருத்தியது பாஜக" - Ex. IAS சசிகாந்த் செந்தில் அதிரடி!

இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, பாரத் என்று நாட்டின் பெயரைக் குறிப்பிடுவது பாஜகவின் கொள்கை முடிவு அல்ல, அரசியல் நகர்வுதான் என்றும் இந்தியா கூட்டணியைக் கண்டு பாஜக அஞ்சுவதை இதன் மூலம் உறுதி செய்ய முடிகிறது என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.

இந்தியா, பாரத் ஆகிய இரண்டு வார்தைகளுக்கும் தொடக்கம் என்ன? நம் நட்டுக்கு பொருத்தமானது எது என்பதை புரிந்துகொள்ளவும் கீழ்காணும் கட்டுரையை வாசியுங்கள்.

இந்தியா vs பாரத்: நம் நாட்டுக்கு பெயர் வைத்தது ஆங்கிலேயர்களா? விரிவான தகவல்கள்!

பாரத் என்ற பெயர் மாற்றத்தை முன்பு எதிர்த்ததா பாஜக? விரிவான தகவல்
இந்தியா vs பாரத்: நம் நாட்டுக்கு பெயர் வைத்தது ஆங்கிலேயர்களா? விரிவான தகவல்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com