பாஜக அரசு தொடர்ந்து 2 தேர்தல்களில் வென்று 9 ஆண்டுகள் ஆட்சி செய்து வரும் சூழலில் 2024 தேர்தல் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்த தேர்தலில் பாஜக, அதிமுக கட்சிகள் கூட்டணியில் இருக்குமா? என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அண்ணா - முத்துராமலிங்க தேவர் குறித்து பேசிய கருத்து அதிமுக தலைவர்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தியது.
இரு கட்சியினரும் காட்டமான கண்டனங்களை தெரிவித்தனர். அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூட்டணி இல்லை என அறிவித்திருக்கிறார்.
எல். முருகன் பாஜக தலைவராக இருந்த காலத்தில் இருந்தே அதிமுக மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையில் மோதல் எழுந்திருக்கிறது. உதாரணமாக எம்.ஜி.ஆர் படங்களை பாஜகவினர் ரத யாத்திரையில் பயன்படுத்தியபோது கூட்டணியில் இருந்த அதிமுக அரசு எதிர்த்தது.
ஆனால் இந்த முறை கூட்டணி முறிவு வரை பேசப்பட்டுவிட்டது. இதற்கு காரணம் அண்ணாமலையின் தலைக்கனம் என அதிமுக அமைச்சர் ஒருவர் கூறியிருந்தார். கட்சியின் பெயராகவே இருக்கும் அண்ணாவை தரக் குறைவாக பேசியது காரணம் எனவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இவை இரண்டுமே இல்லை என்கிறது அரசியல் வட்டம்.
கடந்த 15ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று பாஜக தலைவர் அமித் ஷவை சந்தித்ததார். அப்போதே தேர்தல் கூட்டணி பற்றி இருவரும் பேசியதாக தகவல்கள் வெளியானது.
தகவல்களின் படி, பாஜக 2019 தேர்தலிலேயே கூறியதைப் போல எடப்பாடி தலைமையிலான அதிமுகவுடன் ஒபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரையும் இணைக்க விரும்பிகிறது டெல்லி.
ஆனால் இவர்களுடன் போட்டியிட்டு கட்சியை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி, எந்தக் காலத்திலும் இவர்களுடன் ஒன்றிணைவது இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.
மேலும் கடந்த பாஜக கூட்டணியில் பெரிய கட்சிகளாக இருந்த சிவ சேனா, ஜனதா தள், ஷிரோன்மணி அகாலி தள் உள்ளிட்ட கட்சிகள் இப்போது இந்தியா கூட்டணிக்கு மாறியுள்ளன.
பாஜக இந்த கட்சிகளில் பிளவை உருவாக்கி மாநிலத்தில் ஆட்சியைப் கைப்பற்ற நினைத்ததுதான் இந்த நிலைக்கு காரணம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பாஜக கூட்டணியில் இருக்கும் ஒரே ஒரு பெரிய கட்சி (தொண்டர்கள் எண்ணிக்கையில்) அதிமுக மட்டுமே. ஆனால் அதிமுகவுடனான கூட்டணியை உறுதி செய்ய நினைத்த அமித் ஷா, தமிழகத்தில் உள்ள 40ல் 20 நாடாளுமன்ற இடங்களைக் கேட்டுள்ளார்.
20 சீட் கொடுத்தால் பிற கூட்டணிகளுக்கு எங்களது இடங்களில் இருந்தே பங்கீடு செய்துகொடுக்கிறோம் என்றும் ஒரு திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. கட்சியின் மூத்த உறுப்பினர்களை கேட்டு சொல்வதாக தெரிவித்துவிட்டு தமிழகம் திரும்பியிருக்கிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக நிர்வாகிகளும் பாஜகவின் முன்மொழிவை ஏற்காதநிலையில், தானக வந்து தகாத கருத்துக்களைக் கூறிய அண்ணாமலைக்கு கடுமையான எதிர்ப்பு காட்டப்பட்டது.
தேர்தல் நேரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கூட்டணி அமைக்கப்படும் என்பதே அரசியல் நோக்கர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust