அஜித்: “தந்தையாரின் இறுதிச்சடங்கு ஒரு குடும்ப நிகழ்வாக இருக்க வேண்டும்” நடிகர் அறிக்கை

தகவல் அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும் இழப்பையும் புரிந்து கொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதிச் சடங்குகளை தனிப்பட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும் படி வேண்டிக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அஜித்: “தந்தையாரின் இறுதிச்சடங்கு ஒரு குடும்ப நிகழ்வாக இருக்க வேண்டும்” நடிகர் அறிக்கை
அஜித்: “தந்தையாரின் இறுதிச்சடங்கு ஒரு குடும்ப நிகழ்வாக இருக்க வேண்டும்” நடிகர் அறிக்கை twitter

நடிகர் அஜித்குமாரின் தந்தை உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் அஜித்குமார். இவரின் தந்தை சுப்ரமணியன் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இவருக்கு பக்கவாதம் என்பதால் வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் சென்னையில் உள்ள வீட்டில் இன்று காலை காலமானார்.

நடிகர் அஜித்குமாரின் தந்தை பி. சுப்ரமணியம் இறந்த செய்தி அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தந்தை மறைவு குறித்து நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில்,

”எங்களது தந்தையார் அவர்கள் பல நாட்களாக உடல் நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று காலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்களது தந்தையை அன்போடும் அக்கறையோடும் கவனித்த, எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

எங்கள் தந்தையார் சுமார் 60 ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும் அரவணைப்போடும் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்தார் என்பது எங்களுக்கு நிம்மதியளிக்கிறது

அஜித்: “தந்தையாரின் இறுதிச்சடங்கு ஒரு குடும்ப நிகழ்வாக இருக்க வேண்டும்” நடிகர் அறிக்கை
அஜித் குமார் பகாசூரன் படத்தை பாராட்டினாரா? | Fact Check

இந்த துயர நேரத்தில் பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும் எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களுக்கு தொலைபேசிலையோ கைப்பேசிலையோ குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர்.

தற்போது உள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பு மேற்கொள்வதற்கும் அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம். எங்கள் தந்தையாரின் இறுதிச்சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாக இருக்க கருதுகிறோம்.

எனவே தகவல் அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும் இழப்பையும் புரிந்து கொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதிச் சடங்குகளை தனிப்பட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும் படி வேண்டிக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அஜித்: “தந்தையாரின் இறுதிச்சடங்கு ஒரு குடும்ப நிகழ்வாக இருக்க வேண்டும்” நடிகர் அறிக்கை
Ajith: சினிமாவிலிருந்து ஓய்வு; 60 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் - ரசிகர்கள் அதிர்ச்சி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com