சென்னை : ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ.6000 கிடைக்குமா? வெளியான தகவலின் பின்னணி என்ன?

சென்னையில் அதிகமான பாதிப்பு என்பதால் அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்க உள்ளதாகவும், மற்ற 3 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு மட்டும் நிவாரணத் தொகை வழங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை : ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ.6000 கிடைக்குமா? வெளியான தகவலின் பின்னணி என்ன?
சென்னை : ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ.6000 கிடைக்குமா? வெளியான தகவலின் பின்னணி என்ன?Twitter

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. மக்கள் தங்களின் உடை, உடமை உட்பட அனைத்தையும் இழந்திருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தலா 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகைக்கான டோக்கன், டிசம்பர் 16-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோக்கன் வழங்கப்பட்ட பிறகு டிசம்பர் 20ஆம் தேதி தொடங்கி 10 நாட்களுக்குள் ரேஷன் கடைகளில் நிவாரண தொகை வழங்க திட்டமிட்டுள்ளது.

சென்னையில் அதிகமான பாதிப்பு என்பதால் அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்க உள்ளதாகவும், மற்ற 3 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு மட்டும் நிவாரணத் தொகை வழங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை : ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ.6000 கிடைக்குமா? வெளியான தகவலின் பின்னணி என்ன?
Chennai, Mumbai, Kolkata: மூழ்கும் ஆபத்தில் இந்திய நகரங்கள் - அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!

வெள்ள நிவாரணத் தொகையை ரேசன் கார்டு வைத்திருப்போருக்கு வழங்கப்படும் என அறிவிப்பட்டது. ஆனால் இந்த வெள்ளத்தில் பல ஆவணங்கள் அடித்து செல்லப்பட்டன. அதற்கென முகாம்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ரேசன் கார்டு இல்லாவிட்டால், வாடகை ஒப்பந்தம், சமையல் கேஸ் சிலிண்டர் ரசீது, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்படுகிறது.

ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளதால், அது குறித்த விரிவான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

சென்னை : ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ.6000 கிடைக்குமா? வெளியான தகவலின் பின்னணி என்ன?
Chennai Flood: "மின் ஊழியர்கள் பலி" என பொய் செய்தி பரப்பும் திமுக ஆதரவாளர்கள் - Fact Check

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com