Chennai, Mumbai, Kolkata: மூழ்கும் ஆபத்தில் இந்திய நகரங்கள் - அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!

இந்தியாவின் பல பெருநகரங்கள் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருக்கின்றன. எல்லா நகரங்களுக்கும் சென்னை இரண்டாவது எச்சரிக்கை மணியை அடித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
Chennai, Mumbai, Kolkata: மூழ்கும் ஆபத்தில் இந்திய நகரங்கள் - அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!
Chennai, Mumbai, Kolkata: மூழ்கும் ஆபத்தில் இந்திய நகரங்கள் - அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!Twitter
Published on

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி 3வது நாளாக நடைபெற்று வருகிறது. தலைநகரம் தண்ணீரில் தத்தளிக்கும் நிலைக்கு அரசின் செயல்பாடுகளை குறை சொன்னாலும் 48 மணிநேரத்துக்குள் 40 செ.மீ மழை பதிவாகியுள்ளது அசாதரணமானது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

குறைந்த கால இடைவெளியில் அதிகமழை பெய்யும் போக்கு இத்துடன் நின்றுவிடாது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற சூழல்களை அடிக்கடி சந்திக்க நேரிடும் என சூழலியல் அமைப்புகள் எச்சரித்து வருகின்றன.

மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடந்தபோதிலும் சென்னை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளில் வெள்ள நீர் சூழ மாட்டிக்கொண்ட நிலையைப் பார்க்கிறோம். பாதி மூழ்கிய கட்டடங்களும் தண்ணீரில் அடித்துச்செல்லப்படும் கார்களையும் காணும்போது தனிநபர்களுக்கு இதனால் ஏற்படும் பொருட் செலவு பெருவருத்தத்துக்குரியது என உணரமுடிகிறது.

சென்னை 2015ம் ஆண்டிலும் வெள்ளத்தை சந்திதிருந்தபோதிலும் அனுபவப்பாடம் எதிர்பார்த்த அளவு கைகொடுக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். இயற்கையின் சீற்றத்துக்கு முன்னாள் மனிதர்கள் கையறுநிலையில் இருப்பது சென்னையில் மட்டுமல்ல, உலக நியதி.

இந்தியாவின் பல பெருநகரங்கள் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருக்கின்றன. எல்லா நகரங்களுக்கும் சென்னை இரண்டாவது எச்சரிக்கை மணியை அடித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

சென்னையை எடுத்துக்கொண்டால் பல கால்வாய்கள், சிறிய, பெரிய ஓடைகள், ஆறுகள், நதியின் கிளைகள், ஏரிகள், குட்டைகள், கன்மாய்கள் அழிக்கப்பட்டுதான் பெருநகரமாக உருவாக்கப்பட்டது. இதனால் வெள்ளம் வடிவதற்கு போதுமான நீர்வழித்தடங்கள் இல்லாத நிலை இருக்கிறது. இருக்கும் நீர்நிலைகளை சரியாக பராமரிக்காமல் இருப்பது வெள்ள பாதிப்புக்கு முக்கிய காரணி. நீர்நிலைகளில் பிளாஸ்டிக் குப்பைகள் சேர்வதனால் இதில் அரசுடன் மக்களுக்கும் பங்கிருக்கிறது.

சென்னையின் தட்டையான நிலப்பரப்பு அதிக மழை பெறும்போது ஆபத்தாவது இயல்புதான் என்பதைப் புரிந்துகொண்டு முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.

முன்னரே கூறியதுபோல சென்னை பாதிப்பு என்பது நம் தேசம் எதிர்கொள்ளப்போகும் பெரும் சவாலுக்கான எச்சரிக்கைதான்.

கொல்கத்தா, மும்பை கடலோர நகரங்கள் ஏற்கெனவே கடல்மட்ட அதிகரிப்பு, வெப்பமண்டல புயல்கள், நதி வெள்ளம் உள்ளிட்ட இடர்களை சந்திக்கத் தொடங்கிவிட்டன. காலநிலை மாற்றத்தினால் அதிக மழை வெள்ளத்தையும் வறட்சியையும் சந்திக்கும் அபாயத்தில் இந்த நகரங்கள் இருக்கின்றன.

உலக வங்கி ஆய்வு செய்து இந்தியாவுக்கு அறிவுறுத்திய எச்சரிக்கையில் உப்பு நீர் உட்புகுதல், விவசாய பாதிப்பு, நிலத்தடி நீரின் தரம் குறைதல், நீரினால் பரவும் நோய்களின் அதிகரிப்புக்கு இந்திய நகரங்கள் உட்படலாம் என எச்சரித்துள்ளது.

இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 12 இந்திய நகரங்கள் கடல் மட்ட உயர்வால் தண்ணீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக அரசுகளுக்கிடையேயான காலநிலை மாற்றம் குழு (IPCC) எச்சரித்துள்ளது.

Mumbai Flood, July 2023
Mumbai Flood, July 2023

இந்த எச்சரிக்கைகள் என்றோ ஒரு நடக்கப்போவதற்கான ஆருடம் அல்ல. 70 லட்சம் இந்திய மீனவ குடும்பங்கள் ஏற்கெனவே கடல் அரிப்பின் தாக்கத்தை உணரத்தொடங்கிவிட்டன. 2050ம் ஆண்டு 15000 சதுர கிலோமீட்டர் நிலத்தை நம் நாடு இழக்க நேரிடலாம். இதனால் மீனவ மற்றும் விவசாய சமூகங்கள் பெரும்பாதிப்பைச் சந்திக்க இருக்கின்றன.

தாழ்வான கடலோர பகுதிகளும் டெல்டா பகுதிகளும் அதிக பாதிப்பை அனுபவிக்கப்போகின்றன. சென்னை, மும்பை, கொல்கத்தா நகரங்கள் குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பை கொண்டிருந்தாலும் மக்கள் தொகை அடர்ந்த பகுதிகளாகவும் இருக்கின்றன. ஏற்கெனவே அதிகப்படியான வெள்ளம் உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்து வருவதால் லட்சக்கணக்கான மக்கள் இங்கிருந்து இடம் பெயர்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. இது தேசத்தின் உள்கட்டமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்.

Chennai, Mumbai, Kolkata: மூழ்கும் ஆபத்தில் இந்திய நகரங்கள் - அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!
Chennai : வாழ்வதற்கு குறைந்த விலையுள்ள நகரங்களின் பட்டியலில் சென்னை - எத்தனாவது இடம்?

காலநிலை மாற்றம் கடலோர பகுதிகளுக்கு மட்டும் அச்சுறுத்தல் இல்லை. பீகார், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டதைப் பார்த்தோம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்லி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதை நாம் அறிவோம்.

டெல்லி பாதிக்கப்பட்ட பிறகே இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் சட்ட விரோத சுரங்க பணிகள் மீது அரசு கவனம் செலுத்துகிறது.

Chennai, Mumbai, Kolkata: மூழ்கும் ஆபத்தில் இந்திய நகரங்கள் - அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!
Chennai Floods: 'புயலுக்கு பின் அவலம்' - தலைநகரின் நிலை என்ன?

சென்னையின் நிலை இனி எந்த நகருக்கும் வரக்கூடாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் முழு கவனம் செலுத்த வேண்டும். குறைந்த நேரத்தில் அதிக மழைப் பொழிவதும், கடல் மட்டம் அதிகரிப்பதும், சமதளங்களில் வெள்ளம் ஏற்படுவதும் இனி தவிர்க்க முடியாத சாதாரணமாக நடக்கக் கூடியதாக இருக்கும் என்பதை அரசும் மக்களும் ஏற்றுக்கொண்டு அதற்கேற்ற தொலைநோக்கு தீர்வுகளைத் தேடவேண்டும்.

Chennai, Mumbai, Kolkata: மூழ்கும் ஆபத்தில் இந்திய நகரங்கள் - அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!
Chennai: 10ம் தேதி வருகிறதா அடுத்த புயல்? Fact Check

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com