கோவை பக்கத்தில் வெறும் 600 ரூபாய்க்கு பட்ஜெட் சுற்றுலா செல்ல ரெடியா?

முதலில் சுக்கு காபி, பில்லூர் அணையில் பரிசல் பயணம், பவானி ஆற்றில் நீராடல், அடர்ந்த வனப்பகுதியில் மலைவாழ் மக்கள் சமைத்த மதிய உணவு, காட்டிற்குள் நடைபயணம் என இயற்கையை மொத்தமாக ஒரு நாளில் ரசிக்கலாம்.
கோவை பக்கத்தில் வெறும் 600 ரூபாய்க்கு பட்ஜெட் சுற்றுலா செல்ல ரெடியா?
கோவை பக்கத்தில் வெறும் 600 ரூபாய்க்கு பட்ஜெட் சுற்றுலா செல்ல ரெடியா? Twitter

மூலிகை குளியல், பரிசல் சவாரி, பிடித்த உணவு வகைகளுடன் இப்படி ஒரு சுற்றுலா தலம் கோவையில் இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாது. பரளிக்காடு பற்றி தான் சொல்லபோகிறோம். எப்படி போகலாம் என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

கோவை இருந்து மேட்டுப்பாளயம் செல்லும் சாலையில், காரமடையிலிருந்து பிரியும் சாலையில் சென்றால் 30கிமீ தூரத்தில் பரளிக்காடு எனும் மலையோர கிராமத்தை அடையலாம். இங்கு சொந்த அல்லது வாடகை வாகனத்தில் தான் செல்ல முடியும்.

முதலில் சுக்கு காபி, பில்லூர் அணையில் பரிசல் பயணம், பவானி ஆற்றில் நீராடல், அடர்ந்த வனப்பகுதியில் மலைவாழ் மக்கள் சமைத்த மதிய உணவு, காட்டிற்குள் நடைபயணம் என இயற்கையை மொத்தமாக ஒரு நாளில் ரசிக்கலாம்.

எப்போது அனுமதி

பரளிக்காடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. நினைத்தவுடன் இங்கு சென்றுவிட முடியாது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இங்கு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

இணையதளத்தில் முன்பதிவு

https://coimbatorewilderness.com/ இணையப் பக்கம் மூலம் முன்பதிவு செய்து பணம் செலுத்திய பின்னரே பரளிக்காடு செல்ல முடியும். 9489968480 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு தகவல்கள் பெறலாம்.

கட்டணம்

பெரியவர்களுக்கு டிக்கெட் கட்டணம் ரூ.600, 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ரூ.500, 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இலவசம்.

உணவு

பரளிக்காடு சுற்றுலாத்தலத்தின் சிறப்பு அம்சமே உணவுதான். மலைவாழ் மக்கள் சமைத்துக் கொடுக்கும் 15 வகையான சைவ, அசைவ உணவு வகைகள் சுற்றுலாப்பயணிகளுக்கு வழங்கப்படுகிறது.

இந்த சுற்றுலாத்தலம் சூழல் வனப்பகுதி என்பதால் அமைதியான மனநிலை கொடுக்கும். வளைந்து நெளிந்து செல்லும் பில்லூர் ஆறு, மூலிகை காற்றின் மனம் மற்றும் ஈரக்காற்று உங்கள் மனதுக்கு புத்துணர்வை கொடுக்கும்.

கோவை பக்கத்தில் வெறும் 600 ரூபாய்க்கு பட்ஜெட் சுற்றுலா செல்ல ரெடியா?
கோவை மக்களுக்கு ’திமிர் வரி’ விதித்ததா பிரிட்டிஷ் அரசு? என்ன காரணம்? ஒரு சுவாரஸ்ய வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com