கோவை மக்களுக்கு ’திமிர் வரி’ விதித்ததா பிரிட்டிஷ் அரசு? என்ன காரணம்? ஒரு சுவாரஸ்ய வரலாறு

குசும்புத்தனமான பேச்சுக்கு பெயர்பெற்றவர்கள் கோவை மக்கள் என்பது நமக்கு தெரியும். ஆனால், இந்தியாவை ஆட்டிப்படைத்த ஆங்கிலேயர்களை திமிர் வரி போடவைத்து ஆட்டம் காணவைத்தனர் கோயம்புத்தூர் மக்கள். பிரிட்டிஷ் அரசு விதித்ததிலேயே இந்த திமிர் வரி தான் மிக வித்தியாசமான ஒன்று!
கோவை மக்களுக்கு திமிர் வரி விதித்ததா பிரிட்டிஷ் அரசு? என்ன காரணம்? ஒரு சுவாரஸ்ய வரலாறு
கோவை மக்களுக்கு திமிர் வரி விதித்ததா பிரிட்டிஷ் அரசு? என்ன காரணம்? ஒரு சுவாரஸ்ய வரலாறுட்விட்டர்

இந்தியாவின் சுதந்திரத்துக்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் போராடினர். உயிர் தியாகங்கள் செய்தனர். சிறக்கு சென்றடைந்தனர். நினைத்து பார்க்க முடியாத அளவு சித்திரவதைகள் அனுபவித்தனர்.

ஆனால் சுதந்திரத்துக்காக போராடியவர்கள் பெயரைச் சொல்ல சொன்னால், அதில் கோவை என்ற பெயரோ, அல்லது இந்த ஊரை சேர்ந்தவர்களோ இருப்பது குறைவே.

இந்த பகுதியில் இருந்தும் குற்றிபிடதக்க போராட்டங்கள் நடந்துள்ளன. அதில் சூலூர் ரயில் எரிப்பு மற்றும் சிங்கநல்லூர் ரயில் கவிழ்ப்பு ஆகியவற்றை மறக்க முடியாதது.

கோவை மக்களை இன்று நாம் அவர்களின் குசும்புத்தனமான பேச்சுக்காக அடையாளப்படுத்துகிறோம். ஆனால் இது ஆண்டு ஆண்டுகாலமாக அவர்களிடம் இருந்த குணாதிசியம் என்பதை சொல்லும் விதமாக இருக்கிறது இந்த கதை!

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த சமயத்தில் இந்தியர்கள் மீது உப்பு வரி, ஓபியம் வரி, கஸ்டம்ஸ் வரி என்று அவர்கள் நம் மீது விதித்த வரிகளுக்கு பஞ்சமில்லை.

ஆங்கிலேயர்கள் கோவை மக்களுக்கு திமிர் வரி ஒன்றை விதித்தனர். அது என்ன திமிர் வரி? வரலாற்றை கொஞ்சம் புறட்டிப் பார்ப்போம்!

சிங்கநல்லூர் ரயில் கவிழ்ப்பு

கோவையில் நடந்த முக்கிய போராட்டங்களில் இரண்டு தான் இந்த சிங்கநல்லூர் ரயில் கவிழ்ப்பு மற்றும் சூலூர் விமான தள எரிப்பு போராட்டங்கள்.

செய் அல்லது செத்துமடி என்ற முழக்கத்துடன் நடந்த வெள்ளையனே வெளியேறு திட்டத்தை ஒட்டி, ஒண்டிப்புதூர் பகுதியில் கூட்டம் ஒன்று நடந்தது. அப்போது ராணுவ தளவாடங்களை ஏற்றிச் செல்லும் ரயில்களை கவிழ்ப்பதும், சூலூர் விமான தளத்தை கொளுத்துவதும், இன்னும் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

ஒவ்வொரு திட்டத்துக்கும் தனித்தனி செயற்குழுக்கள் இருந்தன.

உதகமண்டலம் அரவங்காடு ராணுவ தொழிற்சாலையில் இருந்து போர் கருவிகளோடு ரயில் போத்தனூர் வழியே ஈரோடு செல்வதாக போராளிகளுக்கு தகவல் வந்தது. இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 13ஆம் தேதி நள்ளிரவு சிங்கநல்லூர் குளத்தேரி பகுதியில் ரயில் தண்டவாளங்கள் தகர்க்கப்பட்டன. ரயில் கவிழ்ந்தது. எனினும் உயிர்பலிகள் எதுவும் இல்லை.

இந்த போராட்டங்களை தலைமை எடுத்து நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு கண்ணாம்பாளையத்தை சேர்ந்த கே வி ராமசாமி என்பவருக்கு குறிவைத்தது ஆங்கிலேய அரசு.

சிங்கநல்லூர் ரயில் கவிழ்ப்பு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கண்ணாம்பாளையத்தை சேர்ந்த பலர் குண்டுக்கட்டாக தூக்கிசெல்லப்பட்டு ஆங்கிலேயர்களின் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர்

சூலூர் விமான தளம் எரிப்பு

அடுத்த இலக்காக இருந்தது சூலூர் இராணூவ விமான தளம். 1942 ஆகஸ்ட் 26ஆம் தேதி, விமான தள கொட்டகைகள், லாரிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அதில் துரதிர்ஷ்டவசமாக இருவர் உயிரிழந்தனர்.

அங்கிருந்து தப்பித்த ஒருவர் காவல் துறைக்கு தகவல் அளிக்க போராட்டக் காரர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இப்போதும் போராட்டக்காரர்களும் சரி, கே வி ராமசாமியும் சரி அரசின் கண்களில் மண்ணை தூவி தப்பித்து தலைமறைவாயினர்.

கோவை மக்களுக்கு திமிர் வரி விதித்ததா பிரிட்டிஷ் அரசு? என்ன காரணம்? ஒரு சுவாரஸ்ய வரலாறு
திருமணத்துக்காக இந்தியாவை படையெடுத்த பிரிட்டிஷ் இளம்பெண்கள்: ஏன் எப்போது..?

திமிர் வரி

போராட்டக்காரர்கள் சிக்கவில்லை. கண்ணாம்பாளையத்தில் இருந்த அவர்களது உறவினர்கள் ஆங்கிலேயர்கள் பிடியில் சிக்கினர். சூலூர் இராணுவ விமான தளம் தீக்கிரையாக்கப்பட்டதற்கு கண்ணாம்பாளைய மக்கள் இழப்பீடு கொடுக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது ஆங்கிலேய அரசு.

மேலும், குற்றவாளிகள் யார் என்று கண்ணாம்பாளையத்து காரர்கள் வாய் திறவாததால், அவர்கள் மீது திமிர் வரி விதிக்கப்பட்டது. இந்த வரியினை 48 மணி நேரத்துக்குள் கட்டவேண்டும் என்று பொதுமக்களுக்கு கெடு விதித்தது பிரிட்டிஷ் அரசு.

மேலும் கண்ணாம்பாளையத்தை சேர்ந்த 33 பேர் கைது செய்யப்பட்டனர்

இத்தனை நடந்த போதும், கே வி ராம்சாமி கடைசி வரை தலைமறைவாகவே இருந்தார். இதனாலேயே, அவர் சுதந்திர போராட்ட தியாகி என்பதை நிரூபிக்க ஆதாரங்கள் சேகரிப்பது சிரமமாக இருந்தது என்று ஒரு முறை குறிப்பிட்டிருந்தார் கே வி ராமசாமியின் மகன் கே வி ஆர் நந்தகுமார்.

உலகிலேயே முதன் முறையாக திமிருக்கு வரி விதிக்கப்பட்டது கோவை கண்ணாம்பாளையத்துக்கு தான்!

கோவை மக்களுக்கு திமிர் வரி விதித்ததா பிரிட்டிஷ் அரசு? என்ன காரணம்? ஒரு சுவாரஸ்ய வரலாறு
இரண்டாம் உலகப்போருக்கும் ரவா இட்லிக்கும் என்ன தொடர்பு? ஒரு சுவாரஸ்ய வரலாறு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com