சென்னை மாநகராட்சி கடந்த சட்டமன்ற தேர்தல் நிலவரப்படி திமுக-வின் கோட்டையாகத் திகழ்ந்தது. அசைக்க முடியாத அளவு வலுப் பெற்றுள்ள திமுக இதுவரை வாக்கு எண்ணி முடித்துய்ள்ள 140 வார்டுகளில் 125 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளது. ஆனாலும் திமுகவின் கோட்டையில் ஓட்டையைப் போட்டது பாஜக.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி உடன்படிக்கை ஒத்துவராததால் தனித்துக் களமிறங்கியது பாஜக. இது பாஜகவிற்குப் பின்னடைவாக இருக்கும் என நினைத்ததை புரட்டி போட்டு அதிமுகவுக்குத் தான் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை அதிமுக சில இடங்களில் வெற்றி பெற்றாலும் பாஜகவுக்கு வெற்றி என்பது சிம்ம சொப்பனமாகத் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தடைகளை மீறி சென்னை மாநகராட்சியில் முளைத்திருக்கிறது பாஜக. அதுவும் எளிதாகக் கடந்துவிட முடியாத வேட்பாளருடன். இதன் மூலம் தன் சபதத்தை நிறைவேற்றியிருகிறார் அண்ணாமலை.
உமா ஆனந்தன் ஒரு பாஜக ஆதரவாளர் மட்டுமில்லை, அவர் காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கும் ஆதரவாளர். இதனை அவரே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கூறியிருக்கிறார். தீவிர இந்துத்துவ வாதி உமா. மதம் மட்டுமின்றி சாதியத்துக்கும் ஆதரவாகப் பேசக்கூடியவர்.
“ஜாதிகள் இருக்கிறது.. அது நம்முடைய கலாச்சாரத்தில் ஒன்று. ஜாதிதான் நம்முடைய அடையாளம்/ ஜாதிகள் இல்லை என்றால் நம்முடைய கலாச்சாரம் கிடையாது” என மேடைகளில் பேசியவர் உமா ஆனந்த்.