Kovai 360 சேனல் மீது வழக்கு பதிவு - விரிவான தகவல்கள்

கோவை மாநகர காவல்துறை ப்ரான்க் வீடியோ செய்யும் யூடியூப் சேனல்களை எச்சரிக்கும் விதமாக கடந்த சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டருந்தது.
Kovai
KovaiTwitter
Published on

ம்யூடியூபில் அதிகம் பார்க்கப்படும் வீடியோ கேட்டகிரிகளில் ஒன்று ப்ரான்க் வீடியோஸ். இந்த ப்ரான்க் வீடியோக்கள் குறித்து சமீப காலமாக பல விவாதங்கள் எழுகிறது. வெளிநாட்டு இறக்குமதியான இவை ஒரு அறைக்குள், நண்பர்களுக்குள் இருந்தவரை பிரச்னையில்லை. ஆனால் இதுவே பொது இடங்களில், பொதுமக்களை ப்ரான்க் செய்வது குறித்து கேள்விகள் எழுகிறது.

கோவை மாநகர காவல்துறை ப்ரான்க் வீடியோ செய்யும் யூடியூப் சேனல்களை எச்சரிக்கும் விதமாக கடந்த சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டருந்தது.

Youtube
YoutubeCanva

அதில், பொதுமக்களிடம் யூடியூபர்கள் முகம் சுழிக்கும் வகையில் தொட்டு அல்லது கையை பிடித்து அநாகரீகமாக நடக்கின்றனர். இதனால் பெண்கள் மற்றும் வயதானவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே ப்ராங்க் வீடியோக்கள் அல்லது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு உண்டாக்கும் வகையில் நடந்து கொண்டால், அவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் சேனலும் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருகிறது. மேலும் புகார் அளிக்கப்பட்ட நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் மட்டுமின்றி, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளிலும் வழக்குப்பதியப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

Kovai
Anti - Indian கருத்துகள் பதிவு; 8 Youtube சேனல்கள் முடக்கம் - மத்திர அரசு அதிரடி

கோவை 360 சேனலில் பெரும்பாலும் பெண்களின் அருகில் சென்று அமர்ந்து போனில் உரையாடுவது போன்ற வீடியோக்கள் இருக்கும். இது பொது மக்களின் கண்ணியத்துக்கு இழுக்கும் விளைவிக்கும் விதமாக இருக்கிறது என்ற கமன்ட்கள் பல முறை வந்திருக்கின்றன.

பெரும்பாலும் இந்த சேனலின் வீடியோக்கள் பெண்களை மையப்படுத்தியதாகவே இருந்து வருகிறது. இப்போது, கோவை 360 டிகிரி என்ற யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிராங்க் வீடியோஸ் தொடர்பாக தேவையின்றி பொதுமக்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் கோவை காவல்துறை தெரிவித்துள்ளது.

Kovai
"வங்கி வேலையை விட்டுட்டு யூடியூப் ஆரம்பிச்சோம்" - யூடியூபர்கள் நிறைந்த ஒரு கிராமம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com