சென்னை: 'அட்டை பெட்டியில் மகளை தூக்கிச்செல்லும் அப்பா - கலங்க வைக்கும் பின்னணி

. குழந்தையை திரும்ப வழங்க மருத்துவமனை ஊழியர்கள் 2500 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. குழந்தையின் உடலை திரும்ப வழங்கும் போது முறைப்படி துணி சுற்றாமல் அட்டை பெட்டியில் போட்டு வழங்கியுள்ளனர்.
சென்னை: 'அட்டை பெட்டியில் மகளை தூக்கிச்செல்லும் அப்பா - கலங்க வைக்கும் பின்னணி
சென்னை: 'அட்டை பெட்டியில் மகளை தூக்கிச்செல்லும் அப்பா - கலங்க வைக்கும் பின்னணிTwitter

சென்னை, இறந்து பிறந்த குழந்தையை அட்டைபெட்டியில் எடுத்துச் சென்ற தந்தையின் புகைப்படம் காண்பவர்களைக் கலங்கடித்து வருகிறது.

சென்னை புளியந்தோப்பு பகுதியில் கூலித் தொழிலாளியான மசூத்தின் குடும்பம் வாழ்ந்துவருகிறது. மிக்ஜாம் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் இந்த பகுதியும் அடங்கும்.

கடந்த 5ம் தேதி மசூத்தின் மனைவி சௌமியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. புயல்காரணமாக தேங்கிய வெள்ளத்தில் ஆம்புலன்ஸ் வராததாலும் உரிய மருத்துவ உதவி கிடைக்காததாலும் குழந்தை இறந்து பிறந்துள்ளது.

சௌமியாவுக்கு சிகிச்சை அளிக்க அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவரும் கருவிகளும் இருந்தும் சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர்.

பெண் காவல்துறை அதிகாரி தலையீட்டுக்கு பிறகு குழந்தையை சுத்தம் செய்துள்ளனர். ஆனாலும் மின்சாரம் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியவில்லை. நீண்ட போராட்டத்துக்கு பிறகு கிடைத்த ஆம்புலன்சில் சௌமியா கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

குழந்தையை மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைந்த்துள்ளனர். குழந்தையை திரும்ப வழங்க மருத்துவமனை ஊழியர்கள் 2500 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. குழந்தையின் உடலை திரும்ப வழங்கும் போது முறைப்படி துணி சுற்றாமல் அட்டை பெட்டியில் போட்டு வழங்கியுள்ளனர்.

சென்னை: 'அட்டை பெட்டியில் மகளை தூக்கிச்செல்லும் அப்பா - கலங்க வைக்கும் பின்னணி
Chennai Flood: "மின் ஊழியர்கள் பலி" என பொய் செய்தி பரப்பும் திமுக ஆதரவாளர்கள் - Fact Check

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியது. அரசு மருத்துவமனை நிர்வாகத்தை நெட்டிசன்கள் கடுமையாக சாடினர். இந்த சம்பவம் தொடர்பாக பிணவறை ஊழியர் பன்னீர் செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தீவிரமாக விசாரிக்க விசாரணை குழுவும் அமைத்துள்ளனர்.

சென்னை: 'அட்டை பெட்டியில் மகளை தூக்கிச்செல்லும் அப்பா - கலங்க வைக்கும் பின்னணி
Chennai Floods: 'புயலுக்கு பின் அவலம்' - தலைநகரின் நிலை என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com