பொங்கல்: அலைமோதிய மக்கள் கூட்டம்! சொந்த ஊர்களை நோக்கி 2 லட்சம் பேர் பயணம்

இந்த வருடம் தைத் திருநாளையொட்டி ஆம்னி பேருந்துகளில் கடந்த ஜனவரி 11 முதல் ஜனவரி 14 வரை பயணித்தவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளார் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன்.
பொங்கல்: தலைநகரில் அலைமோதிய மக்கள் கூட்டம்!  2 லட்சம் பேர்  பயணம்
பொங்கல்: தலைநகரில் அலைமோதிய மக்கள் கூட்டம்! 2 லட்சம் பேர் பயணம்ட்விட்டர்
Published on

ஜனவரி 11 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மட்டும் சொந்த ஊருக்கு 2 லட்சத்து 15 ஆயிரம் பேர் இதுவரை பேருந்தில் பயணித்துள்ளதாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

பண்டிகைகள் வந்தாலே சொந்த பந்தங்கள் ஒன்று கூடும், வீடே கலகலவென்று ஆகிவிடும். பயணங்கள் மேற்கொள்ளலாம். முக்கியமாக வெளியூர்களில் இருப்பவர்களுக்கு தங்கள் வீடுகளுக்கு சென்று வர இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

பொங்கல்: தலைநகரில் அலைமோதிய மக்கள் கூட்டம்!  2 லட்சம் பேர்  பயணம்
MTC முதல் Chalo வரை : சென்னையில் பேருந்து டைமிங் குறித்து தெரிந்துகொள்ள உதவும் 5 செயலிகள்

பண்டிகை சமயங்களில், இப்படி சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்று வர சிறப்பு பேருந்துகள், ரயில் சேவைகளை அரசு அறிமுகப்படுத்தும். வருடாவருடம் லட்சக்கணக்கானோர் இவ்வாறு பயணம் செய்கின்றனர்.

இந்த வருடம் தைத் திருநாளையொட்டி ஆம்னி பேருந்துகளில் கடந்த ஜனவரி 11 முதல் ஜனவரி 14 வரை பயணித்தவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளார் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன்.

ஆம்னி பேருந்துகளில் ஜனவரி 11ஆம் தேதி சென்னையில் இருந்து தமிழகத்தின் பிறபகுதிகளுக்கு 702 ஆம்னி பேருந்துகளில் 25,276 பயணிகளும் சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் 1190 ஆம்னி பேருந்துகளில் 42,842 பயணிகளும்.

ஜனவரி 12 ஆம் தேதி சென்னையில் இருந்து தமிழகத்தின் பிறப்பகுதிகளுக்கு 960 ஆம்னி பேருந்துகளில் 34592 பயணிகளும் சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் 1392 ஆம்னி பேருந்துகளில் 50133 பயணிகள் பயணித்துள்ளனர்

ஜனவரி 13 ஆம் தேதி சென்னையில் இருந்து தமிழகத்தின் பிறப்பகுதிகளுக்கு 1561 ஆம்னி பேருந்துகளில் 56200 பயணிகளும் சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் 2054 ஆம்னி பேருந்துகளில் 73948 பயணிகளும்,

ஜனவரி 14 ஆம் தேதி சென்னையில் இருந்து தமிழகத்தின் பிறப்பகுதிகளுக்கு 940 ஆம்னி பேருந்துகளில் 33840 பயணிகளும் சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் 1360 ஆம்னி பேருந்துகளில் 48960 பயணிகளும்,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்தும் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் 2 லட்சத்து 15 ஆயிரத்து 883 பயணிகளை ஜனவரி 11 ,12 ,13 ,14 ஆகிய நாட்களில் 4 நாட்களில் பயணித்துள்ளார்கள்.

பொங்கல்: தலைநகரில் அலைமோதிய மக்கள் கூட்டம்!  2 லட்சம் பேர்  பயணம்
மகா சிவராத்திரி: பூஜை நேரம், விரத நடைமுறை என்ன? முழு தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com