சென்னை : ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் அறிமுகம் - எப்போது பயன்பாட்டிற்கு வரும்?

மாதவரம் முதல் சிப்காட் வரை, லைட்அவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை, மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை என இது 3 வழித்தடங்களைக் கொண்டதாக திட்டமிடப்பட்டுள்ளது.
Metro
Metro Twitter
Published on

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் 2026 ஆம் ஆண்டுக்குள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஓட்டுநர் இல்லா ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இரண்டு கட்டங்களாக மெட்ரோ ரயில் செயல்பட திட்டமிடப்பட்டன.

முதல் கட்டத்தில் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை, சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் செயல்படுகிறது.

மேலும் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. இந்த இரண்டு வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

இரண்டாம் கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இரண்டாம் கட்ட செயல்பாட்டின் ஒரு பகுதியாக ஓட்டுநர் இல்லாத ரயில்களை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சென்னை மெட்ரோ இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.

Metro
விவேக் எக்ஸ்பிரஸ் : 4273 கி.மீ, 55 நகரங்கள், 3 நாள் - இந்தியாவின் நீண்ட ரயில் வழித்தடம்

சிக்னல்களில் இருந்து பெறும் தகவல்களின் அடிப்படையில் ரயில்கள் இயக்கப்படும் என்று அவர் கூறினார்.

இதற்கான பணிகள் அனைத்தும் 2026-ம் ஆண்டுக்குள் முடிவடைந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதவரம் முதல் சிப்காட் வரை, லைட்அவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை, மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை என இது 3 வழித்தடங்களைக் கொண்டதாக திட்டமிடப்பட்டுள்ளது.

ஓட்டுநர்கள் இல்லா மெட்ரோ ரயில் இந்தியாவில் முதல்முதலாக கடந்த 2020ம் ஆண்டு டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Metro
ரயில் விபத்தில் இறந்தவரிடம் இருந்து 35 பேருக்கு மர்ம ஃபோன் கால் - நடந்தது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com