சென்னை: ஜூன் மாதத்திலேயே வெளுத்து வாங்கும் மழை - வழக்கத்திற்கு மாறான வானிலைக்கு காரணமென்ன?

கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் ஜூன் மாதத்தில் மழை பெய்து வருகிறது. ஜூன் மாதம் மட்டுமே அதிக வெயிலுக்காகவும் கன மழைக்காகவும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வழக்கத்திற்கு மாறான வானிலைக்கு காரணமென்ன?
சென்னை: ஜூன் மாதத்திலேயே வெளுத்து வாங்கும் மழை - வழக்கத்திற்கு மாறான வானிலைக்கு காரணமென்ன?
சென்னை: ஜூன் மாதத்திலேயே வெளுத்து வாங்கும் மழை - வழக்கத்திற்கு மாறான வானிலைக்கு காரணமென்ன?Twitter
Published on

கடந்த இரண்டு நாட்களாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

வழக்கமாக நவம்பர் - டிசம்பர் மாதத்தில் கொட்டி தீர்க்கும் மழையானது ஜூன் மாதமே தொடங்கியிருக்கிறது.

கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் ஜூன் மாதத்தில் மழை பெய்து வருகிறது.

ஜூன் மாதம் மட்டுமே அதிக வெயிலுக்காகவும் கன மழைக்காகவும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று சென்னையில் அதிகபட்சமாக விமான நிலையத்தில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தரமணியிலும் ஆலந்தூரிலும் 14 செ.மீயும், செம்பரம்பாக்கத்தில் 13 செ.மீயும் அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

சென்னை மட்டுமின்றி கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது.

மழை
மழைTwitter

இந்த மழைக்குக் காரணம் என்ன?

தற்போது பெய்து வரும் மழைக்கு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியே காரணம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், காற்று தென் பகுதியிலிருந்து வடபகுதியை நோக்கி சென்றபோது காற்றின் வேகம் அதிகரித்து, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது.

இதன் காரணமாகவே கடந்த 2 நாட்களாக மழை நீடித்து வருகிறது. அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், டெல்டா மாவட்டங்கள், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், மயிலாடுதுறையில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னை: ஜூன் மாதத்திலேயே வெளுத்து வாங்கும் மழை - வழக்கத்திற்கு மாறான வானிலைக்கு காரணமென்ன?
வைர மழை பொழியும் இந்த இடம் குறித்து தெரியுமா? - விஞ்ஞானிகள் சொல்லும் ஆச்சர்ய தகவல்
மழை
மழைTwitter

73 ஆண்டுகளில் ஒரே நாளில் அதிக மழை

தமிழ்நாட்டில் பொதுவாக ஜூன் மாதத்தில் மிகக் குறைவாகவே மழை பெய்யும். இது தென்மேற்குப் பருவமழைக் காலம் என்பதால், மேற்குத் தொடர்ச்சி மழையின் மேற்கு பகுதியிலேயே அதிக மழை பெய்யும்.

ஆனால், சென்னையில் ஜூன் மாதத்தைப் பொறுத்தவரை கடந்த 73 ஆண்டுகளில் ஒரே நாளில் அதிக மழை பெய்த நாட்களின் பட்டியலில் இந்த ஜூன் 19ஆம் தேதியும் இடம்பெற்றுள்ளது.

சென்னை மீனம்பாக்கத்தைப் பொருத்தவரை கடந்த 73 ஆண்டுகளில் இரண்டாவது அதிகபட்ச மழை பெய்துள்ளது. இதற்கு முன்பாக 1996ல் 282.2 மி.மீ மழை பதிவானது. தற்போது கடந்த 24 மணி நேரத்தில் 158.2 மி.மீ பதிவாகியுள்ளது.

சென்னை: ஜூன் மாதத்திலேயே வெளுத்து வாங்கும் மழை - வழக்கத்திற்கு மாறான வானிலைக்கு காரணமென்ன?
பாலைவனத்தில் கூட மழை பெய்யும் இங்கு பெய்யாது! - விசித்திர கிராமத்தின் பின்னணி என்ன?

எல்நினோவுக்கும் இப்போது பெய்து வரும் கனமழைக்கும் சம்பந்தம் இருக்கிறதா?

எல் - நினோ என்பது மிகப் பெரிய காலநிலை நிகழ்வு. அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் கடலின் வெப்ப நிலை இயல்பைவிட ஒரு டிகிரி அதிகரிப்பதால் இது ஏற்படுகிறது.

அந்தக் கடல் பகுதியில் 3 டிகிரி அளவுக்கு வெப்ப நிலை அதிகரித்தால், தீவிர எல் - நினோ ஏற்படும். ஆனால் இந்த மழைக்கும் எல் -நினோவுக்கும் தொடர்பு இல்லை.

தற்போது பெய்து வரும் மழைக்கு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com