ஆப்ரிக்க பெண்ணை இந்து முறைப்படி கரம் பிடித்த கோவை மாப்பிள்ளை

திருமண மண்டபத்தில் நாதஸ்வரம் வாத்திய குழுவினரின் இசையுடன், பெண்ணை பல்லக்கில் வைத்து அழைத்து வந்தனர். அய்யர் ஹோமம் வளர்த்து, பூஜைகள் செய்து, பெரியவர்கள் தாலி எடுத்துக்கொடுக்க மணமகன் முத்துமாரியப்பன், வால்மி இனாங்கா கழுத்தில் தாலி கட்டினார்.
Muthumariappan - Valmi Inanga Mosoke
Muthumariappan - Valmi Inanga MosokeTwitter
Published on

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி தர்மலட்சுமி. இவர்களது மகன் முத்துமாரியப்பன். இவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர். இவர் டிப்ளமோ மெக்கானிக் என்ஜினீயரிங் படித்துவிட்டு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கேம்ரூன் பகுதியில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.

அப்போது அவருக்கும் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கேம்ரூனில் வசிக்கும் எம்மா எஞ்சிமா மொசொக்கே என்பவரின் மகள் வால்மி இனாங்கா மொசொக்கே என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. வால்மி இனாங்கா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்.

இவர்கள் இரண்டு பேரும் காதல் விவகாரத்தை இவர்களது வீட்டாரிடம் தெரிவித்து சம்மதம் பெற்றனர்.

Muthumariappan - Valmi Inanga Mosoke
Muthumariappan - Valmi Inanga MosokeTwitter

மேலும் முத்துமாரியப்பன், வால்மி இனாங்காவை தனது சொந்த மண்ணில் இந்து முறைப்படி திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்

அதன்பிறகு கோவையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இவர்களது திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து திருமண மண்டபத்தில் நாதஸ்வரம் வாத்திய குழுவினரின் இசையுடன், பெண்ணை பல்லக்கில் வைத்து அழைத்து வந்தனர்.

அய்யர் ஹோமம் வளர்த்து, பூஜைகள் செய்து, பெரியவர்கள் தாலி எடுத்துக்கொடுக்க மணமகன் முத்துமாரியப்பன், வால்மி இனாங்கா கழுத்தில் தாலி கட்டினார்.

Muthumariappan - Valmi Inanga Mosoke
Muthumariappan - Valmi Inanga MosokeTwitter

தொடர்ந்து மணமேடையை அவர்கள் சுற்றி வந்தும், மணமகளுக்குக் கையில் மோதிரமும், காலில் மெட்டியையும் மணமகன் அணிவித்து விட்டார். திருமணத்தில் பங்கேற்ற ஆப்பிரிக்க மணமகளின் உறவினர்கள் தமிழக பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து பங்கேற்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Muthumariappan - Valmi Inanga Mosoke
தேவாலயத்தில் மணி அடிக்கும் இஸ்லாமிய சேவகர் - கேரளாவில் இன்றும் தொடரும் ஆச்சரியம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com