அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விமரிசையாக நடந்து முடிந்துள்ளது. ஒரு கோவில் திறப்பு நிகழ்வு என்பதைத் தாண்டி அரசியல் ரீதியிலும் இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றனர். அந்த வகையில் திருமாவளவன் கூறியதாவது, "அயோத்தியில் நடைபெறுவது கும்பாபிஷேகம் என்னும் குடமுழுக்கு நிகழ்வல்ல. இது ஆன்மீக விழா என்னும் பெயரில் நடைபெறும் அரசியல் விழா. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, அப்பாவி இந்துக்களின் மத உணர்வுகளையும் கடவுள் நம்பிக்கையையும் அரசியல் ஆதாயமாக சுரண்டும் சதிவிழா!
இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் மோடி, தனது கைகளால் தொட்டு ராமரின் கற்சிலைக்கு உயிரூட்டப் போகிறார். அதற்கு வட இந்திய சங்கராச்சாரி ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். இது தானே சனாதனம். பிரதமரே ஆனாலும் சூத்திரனாக பிறந்த மோடி, தனது குல தருமத்தை மீறுவது கூடாது. பிராமணரல்லாத எவருக்கும் கடவுளைப் பிதிஷ்டை செய்யும் உரிமையோ அதிகாரமோ இல்லை என்பதுதான் சனாதனம்.
மோடியின் இந்த மரபு மீறலை பெரும்பான்மையான சனாதன சக்திகள் அனுமதிப்பதும், அமைதி காப்பதும் பிராமணரல்லாத பிற அப்பாவி இந்துக்களை ஏய்க்கும் ஒரு மோசடி அரசியல் உத்தியே ஆகும்".
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust