8ஆம் நூற்றாண்டின் இந்து-பௌத்த சிற்பங்கள் கண்டுபிடிப்பு - எங்கே?

உள்ளூர்வாசிகள் இந்த சிற்பங்களை பல தலைமுறைகளாக பாதுகாத்து, இந்து கடவுள்களாகவும், துர்கா, சிவன், லட்சுமி, விஷ்ணு மற்றும் கணேஷ் போன்ற தெய்வங்களாகவும் வழிபடுகின்றனர்.
8th Century Hindu-Buddhist sculptures found near Assam-Mizoram border
8th Century Hindu-Buddhist sculptures found near Assam-Mizoram border Twitter

ஒரு தொல்பொருள் கண்டுபிடிப்பில், அசாம் பல்கலைக்கழகத்தின் காட்சிக் கலைத் துறையைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் டாக்டர் கணேஷ் நந்தி மற்றும் ஆராய்ச்சியாளர் டாக்டர் பினோய் பால் ஆகியோர் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான இந்து மற்றும் பௌத்த தாக்கம் கொண்ட சிற்பங்களை கண்டுபிடித்துள்ளனர்.

அசாமின் ஹைலகண்டி மாவட்டத்தை ஒட்டியுள்ள மிசோரம் மாநிலம் மாமித் மாவட்டத்தில் உள்ள கோலாலியன் கிராமத்தில் இந்த சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உள்ளூர் மக்கள், ரியாங் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் இந்து தெய்வங்களை இங்கு வழிபடுகின்றனர். 7 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட திரிபுராவின் உனகோட்டி மற்றும் பிலாக் ஆகியவற்றில் காணப்படும் கல் வேலைப்பாடுகளுடன் இது ஒத்திருருப்பதாக டாக்டர் நந்தி குறிப்பிட்டிருக்கிறார்.

கண்டுபிடிப்புகளில், ஒரு பெண் அமைப்பு கொண்ட முழு அளவிலான சிலை இருந்தது. ஆடை மற்றும் அதன் பாணி புத்த பகவானை ஒத்திருந்தது.

ஆனால் இந்த சிற்பம் புத்தரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறதா அல்லது இந்துக் கடவுளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறதா என்பதில் குழப்பம் நிலவி வருகிறது.

திரிபுராவின் மாணிக்ய மன்னர்கள் பற்றிய சரித்திரம் தான் ராஜ்மாலா. இதன்படி இந்த சிற்பங்கள் திரிபுரா இராச்சியத்தின் செல்வாக்கின் கீழ் இருந்த காலகட்டத்திற்கு முந்தையதாக இருக்கலாம் என்று கூறுகிறது.

8th Century Hindu-Buddhist sculptures found near Assam-Mizoram border
அசாம் ஹாஃப்லாங்: இந்தியாவில் இருக்கும் மினி சுவிட்சர்லாந்து பற்றி தெரியுமா?

உள்ளூர்வாசிகள் இந்த சிற்பங்களை பல தலைமுறைகளாக பாதுகாத்து, இந்து கடவுள்களாகவும், துர்கா, சிவன், லட்சுமி, விஷ்ணு மற்றும் கணேஷ் போன்ற தெய்வங்களாக வழிபடுகின்றனர். 1989 க்குப் பிறகு இப்பகுதி மிசோரமின் ஒரு பகுதியாக மாறியபோது நடந்த தாக்குதல்களால் ஏற்பட்ட அழிவின் காரணமாக அசல் கலைப்படைப்புகள் அழிந்துபோகின.

குவஹாத்தியில் உள்ள இந்திய தொல்லியல் துறை (ASI) இந்த இடத்தை ஆய்வு செய்ய தயாராகி வருகிறது.

இந்தச் சிற்பங்களின் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கும், பல கலைப்பொருட்களை வெளிக்கொணரவும் இந்த ஆராய்ச்சி முக்கியமானதாக உள்ளது.

8th Century Hindu-Buddhist sculptures found near Assam-Mizoram border
அசாம் : ஒரே ஒரு குடும்பம் மட்டும் வசிக்கும் இந்திய கிராமம் - பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com