பாஸ் முதல் மாண்டஸ் வரை - 50 ஆண்டுகளில் சென்னையைத் தாக்கிய முக்கிய புயல்கள்

இந்த மாண்டஸ் புயல் மரக்காணம் - மகாபலிபுரம் இடையே இன்று இரவு கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைத் தாக்கிய புயல்கள்
சென்னையைத் தாக்கிய புயல்கள் Twitter
Published on

வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரி, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தற்போது சென்னையில் இருந்து தென் கிழக்கு பகுதியில் புயல் 325 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இந்த மாண்டஸ் புயல் மரக்காணம் - மகாபலிபுரம் இடையே இன்று இரவு கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக சென்னையைத் தாக்கிய புயல்கள் பற்றியத் தொகுப்பை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

Mandous Cyclone
Mandous CycloneTwitter

1972 ஆம் ஆண்டு சென்னையை புயல் தாக்கிய போது 100 மிமீ முதல் 150 மிமீ வரை மழை பதிவானது.

1984-ஆம் ஆண்டு மற்றொரு புயல் சென்னையைத் தாக்கியது. இந்தப் புயல் ஸ்ரீஹரிகோட்டா வழியாக கரையைக் கடந்தது.

1985-ஆம் ஆண்டு சென்னையைத் தாக்கிய புயலானது நெல்லூர் வழியாக கரையைக் கடந்தது. காற்றின் வேகமானது மணிக்கு 80 கிமீ முதல் 90 கிமீ வரை வீசியது.

1994 ஆம் ஆண்டு சென்னையை தாக்கிய புயலால் 2 நாட்களில் 350 மிமீ மழை பதிவானது. காற்றின் வேகமானது 120 கிமீ முதல் 140 கிமீ வரை வீசியது.

அதனைத்தொடர்ந்து கடந்த 2005 ஆம் ஆண்டும் சென்னையை தாக்கிய புயலுக்கு பாஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.

2008 நவம்பரில் 'நிஷா' புயல், நாகபட்டினம் - காரைக்கால் இடையே மணிக்கு, 80 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது.

சென்னையைத் தாக்கிய புயல்கள்
Mandous Cyclone : புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் மொத்தம் எத்தனை? அதன் அர்த்தம் என்ன?

2010 ஆம் ஆண்டு ஜல் புயல் சென்னையைத் தாக்கியது. சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடந்த இந்தப் புயலானது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைத் தொட்டது. ஜல் புயலின்போது கனமழை இருந்தாலும் சென்னைக்கு பெரிதளவு பாதிப்பு ஏற்படவில்லை.

2011 டிசம்பரில் உருவான தானே' புயல் புதுச்சேரி - கடலுார் இடையே மணிக்கு, 135 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது. பயிர்கள், மரங்கள், மின்கம்பங்கள் நாசமாகின.

அதன் பின்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னையைத் தாக்கிய நீலம் புயலின் போது 120 மிமீ மழை பதிவானது. காற்றின் வேகமானது 70 கிமீ வேகத்தில் வீசியது.

கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னையைத் தாக்கிய மிகப் பெரிய புயலாக வர்தா அமைந்தது. 192 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசியதால் சென்னையில் நீண்ட காலமாக இருந்த பல மரங்கள் சரிந்து விழுந்தன.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஒக்கி புயலானது சென்னையைத் தாக்கியது. 2 நாட்களில் 300 மிமீ மழையிலிருந்து 500 மிமீ மழை பதிவானது

2018 நவம்பரில் 'கஜா' புயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. மணிக்கு, 110 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. டெல்டா மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

2020 நவம்பரில் வங்கக்கடலில் உருவான 'நிவர்' புயல், காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது.

சென்னையைத் தாக்கிய புயல்கள்
'மாண்டஸ்' : புயல்களுக்கு பெயர் வைப்பது ஏன்? எதனடிப்படையில் பெயர்களை தேர்வு செய்கிறார்கள்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com