கோவையைச் சேர்ந்த டிசைனர் மற்றும் அறக்கட்டளை நிறுவனர் ஒருவர் தன் மகளுக்குச் சாதி மத பேதம் வேண்டாம் எனக்கூறி, 'no religion, no caste' சான்றிதழைப் பெற்றுள்ளார். இதைப் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
கோவை கேகே புதுரை சேர்ந்த நரேஷ் கார்த்திக்-காயத்ரி தம்பதி தங்கள் மகளுக்கு மூன்று வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து, பள்ளியில் எல் கே ஜியில் சேர்க்கச் சென்ற போது பள்ளியின் விண்ணப்பத்தில் சாதி மற்றும் மதம் என்ற இடத்தை காலியாக விட்டுள்ளனர். பள்ளி நிர்வாகம் அதை நிரப்பச் சொன்னபோது விருப்பமில்லை என்று தெரிவித்ததால், குழந்தையைப் பள்ளியில் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டனர். இதே கதை பல பள்ளிகளிலும் தொடர, தன் மகளுக்குச் சாதி மத பேதம் வேண்டாம் என்று கூறி, 'no religion, no caste' சான்றிதழை நரேஷ் பெற்றுள்ளார்.
தமிழ்நாடு மாநிலக் கல்வித் துறை 1973 மற்றும் 2000 ஆம் ஆண்டு, தனித்தனி உத்தரவுகளில், பெற்றோர் சாதி, மத பத்திகளை நிரப்பாமல் விட விரும்பினால், அதற்கு அனுமதிக்கவேண்டும் என்றும், இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழிலும், மாற்றுச் சான்றிதழிலும் மதம் மற்றும் சாதியைக் குறிப்பிடுவதைப் பெற்றோர்கள் விரும்பவில்லை என்றால், 'மதம் இல்லை, சாதி இல்லை' என்று குறிப்பிட அனுமதிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநருக்கு உத்தரவிட்டிருந்தது.
இதைப் பற்றி அறிந்திடாத போதிலும், இந்த தம்பதி, தங்கள் மகள் சாதி மற்றும் மத கட்டுப்பாடுகளுக்குள் வரவேண்டாம் என்றுக்கூறி இந்த சான்றிதழைப் பெற்றுள்ளனர். Seedreaps கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை (Seedreaps Educational and Charitable Trust) -ன் நிறுவனரான இவர் மக்களுக்கு இதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த சான்றிதழைப் பெற்றதாகக் கூறியுள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் படி, கோவை வடக்கு வட்டாட்சியரிடம் விண்ணப்பித்து சான்றிதழ் பெற்றுள்ளார். இந்த சான்றிதழைப் பெறுபவர் சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் அரசின் இட ஒதுக்கீடு அல்லது சிறப்புரிமைகளைப் பெற இயலாது. இந்த சான்றிதழ் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இவருக்கு முன், சினேகா என்ற 35 வயது வழக்கறிஞர் ஒருவர் இந்த சான்றிதழை பெற்றது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust