Devala: ஊட்டிக்கு அருகில் மறைந்திருக்கும் இந்த தென்னிந்தியாவின் சிராபுஞ்சி பற்றி தெரியுமா?
Devala: ஊட்டிக்கு அருகில் மறைந்திருக்கும் இந்த தென்னிந்தியாவின் சிராபுஞ்சி பற்றி தெரியுமா?twitter

Devala: ஊட்டிக்கு அருகில் மறைந்திருக்கும் இந்த தென்னிந்தியாவின் சிராபுஞ்சி பற்றி தெரியுமா?

இரண்டு வனக் காப்பகங்களுக்கு இடையில் நீலகிரி மலைத்தொடரில் அமைந்திருக்கும் இவ்விடம், அதிக மக்கள் வரத்து இல்லாத ஒரு அமைதியான இடமாகும்.
Published on

என்னதான் ஜூன் மாதம் தொடங்கிவிட்டாலும் வெயிலின் தாக்கம் இன்னும் முழுதாக முடிந்ததாக இல்லை. இந்த வெயிலிலிருந்து தப்பிக்க குளிர் பிரதேசங்களை தேடி செல்கிறோம். அதுவும் அதிக மக்கள் கூட்டம் வராத இடமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

அப்படி எதிர்பார்ப்பவர்களுக்காகவே இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அழகிய, இயற்கை எழில் கொஞ்சும், அதே நேரத்தில் அதிகம் அறியப்படாத இடங்களை பற்றி முன்னர் பேசியிருக்கிறோம்.

அந்த பட்டியலில் இணைய வருகிறது தேவாலா என்கிற இந்த அழகிய மலைவாசஸ்தலம்.

கேரளா தமிழ்நாடு என்ற இரு மாநிலங்களிலும் அமைந்திருக்கிறது இந்த சிறிய மலைப்பிரதேசம். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், கூடலூர் பந்தலூர் சாலையில் கூடலூரிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது தேவாலா

சென்னை, கோயம்புத்தூர், கோழிக்கோடு மற்றும் பெங்களூருவிலிருந்து தேவாலா மலைபிரதேசத்துக்கு செல்ல வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூருவிலிருந்து செல்லும்போது முதுமலை மற்றும் பந்திபூர் தேசிய பூங்காக்களை கடந்தே இங்கு செல்கிறோம்

இரண்டு வனக் காப்பகங்களுக்கு இடையில் நீலகிரி மலைத்தொடரில் அமைந்திருக்கும் இவ்விடம், அதிக மக்கள் வரத்து இல்லாத ஒரு அமைதியான இடமாகும்.

எவ்வளவு அமைதி என்றால், இங்குள்ள ஏரியில் போட்டிங் செல்வது, சாலையோரங்களில் கடலை விற்பவரோ, தேநீர் கடைகளோ கூட இங்கு காண்பது அரிதே.

ஒரு லாங் வீக்கெண்ட் உங்களுக்கு கிடைக்கிறது என்றால் அடுத்த ட்ரிப்பை இந்த இடத்திற்கு பிளான் செய்யலாம்

Devala: ஊட்டிக்கு அருகில் மறைந்திருக்கும் இந்த தென்னிந்தியாவின் சிராபுஞ்சி பற்றி தெரியுமா?
Lovedale: ஊட்டியில் மறைந்திருக்கும் இந்த சிறிய நகரம் - குடும்பத்துடன் ட்ரிப் செல்ல தயாரா?

இந்த தேவாலா மலைபிரதேசத்தை தென்னிந்தியாவின் சிராபுஞ்சி என்று அழைக்கின்றனர். வருடத்தின் 6 மாதங்களுக்கும் மேல் இங்கு மழை பொழிவு இருப்பதால் இந்த பெயர் வந்துள்ளது.

மத்திய மாசு கட்டுபாட்டின் அறிக்கையின்படி, தேவாலா மலைகளில் காற்று மிக சுத்தமானது என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றிலும் பரந்து விரிந்த தேயிலை தோட்டங்களின் வனப்பு கண்ணை பறிக்கிறது.

இது ஒரு தேசிய வனவிலங்கு காப்பகமாகவும் செயல்படுவதால், ஆங்காங்கே யானை, புலிகள், மயில்கள், மான் மற்றும் சில அரிதான வன விலங்குகளையும் நாம் ஸ்பாட் செய்யலாம்.

மேலும் நீங்கள் பறவை விரும்பியாக இருந்தால் இங்கு மலபார் விசில் தர்ஸ்ட், ஆரஞ்சு மினிவெட், சிவப்பு விஸ்கர்ட் புல்புல் உள்ளிட்ட அரிதான பறவைகளையும் காணலாம்

இதனால் 6 மணிக்கு மேல் வனத்துக்குள் செல்லவும் நமக்கு அனுமதி இல்லை.

Devala: ஊட்டிக்கு அருகில் மறைந்திருக்கும் இந்த தென்னிந்தியாவின் சிராபுஞ்சி பற்றி தெரியுமா?
Kerala: ’ஏழைகளின் ஊட்டி’ Nelliyampathy மலைகள் குறித்து தெரியுமா?

கேரளா தமிழ்நாடு என இரண்டு மாநிலங்களிலும் அமைந்திருப்பதால், இரு இடங்களின் பாரம்பரிய உணவுகளையும் நாம் இங்கு ருசிக்க முடிகிறது.

உருளைக்கிழங்கு பஜ்ஜிகளும், பழம்பொறியும், சுடச் சுட கட்டஞ்சாயாவும், குளிருக்கு இதமாக இருக்கிறது.

இங்குள்ள ரிசார்ட்களில் சுற்றுலா பயணிகளுக்கு காலை உணவாக தமிழ்நாட்டின் இட்லி தோசையும், மதிய உணவுக்கு ஓணம் பண்டிகையின்போது பறிமாறப்படும் Onam sadhya இலைச்சாப்பாடு கிடைக்கிறது.

மேலும், மலைப்பகுதி என்பதால் இங்கு அவ்வளவாக மொபைல் போனில் சிக்னல் கிடைப்பதில்லை.

இதுவும் ஒரு வகையில் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ளலாம். எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் நாம், கொஞ்சம் இந்த டிஜிட்டல்மயமாக்கப்பட்ட உலகில் இருந்து தப்பிக்கலாம்.

வன விலங்குகள் சாதாரணமாக வெளியில் நடமாடுவதால் அங்கு வரும் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது

Devala: ஊட்டிக்கு அருகில் மறைந்திருக்கும் இந்த தென்னிந்தியாவின் சிராபுஞ்சி பற்றி தெரியுமா?
ஊட்டி : மலை வாசஸ்தலத்தில் மறைக்கப்பட்ட ”பனிச்சரிவு ஏரி” குறித்து தெரியுமா? பட்ஜெட் Spot

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com