Vetrimaran: ”ஒரு நாளைக்கு 180 சிகரெட் பிடிப்பேன்” - வைரலாகும் இயக்குநர் வெற்றிமாறனின் பேச்சு

கல்லூரியில் படிக்கும்போது ஒரு நாளைக்கு 70 சிகரெட்டுகள் பிடிப்பேன். இயக்குநர் ஆன பிறகு, ஒரு நாளைக்கு 175 முதல் 180 சிகரெட்டுகளை வரை புகைத்திருக்கிறேன்.
Vetrimaran
Vetrimaranட்விட்டர்
Published on

புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு எவ்வளவு கேடு விளைவிக்கும் என்பதை தன் சொந்த அனுபவத்தை வைத்து பேசியுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன், போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் வெற்றிமாறன். இவற்றில் ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைத்திருந்தது.

இவரது திரைப்படங்களுக்கு ரசிகர்கள் இருப்பது போலவே, வெளியில் இவரது பேச்சுக்கும் ரசிகர்கள் உள்ளனர்.

சமீபத்தில் லொயோலா கல்லூரியில் பிரசாந்த் மருத்துவமனை மற்றும் லொயோலா கல்லூரி விஷுவல் கம்யூனிகேஷன் துறை இணைந்து “இளம் இதயத்தை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் குறும்பட போட்டியை நடத்தியது. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர் தனது புகைப்பிடிக்கும் பழக்கம் குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும் பேசியிருக்கிறார்.

Vetrimaran
Rapido ஓட்டும் IMDb 9.2 ரேட்டிங் பெற்ற வெப்சீரிஸ் இயக்குநர் - நெஞ்சை உருக்கும் உண்மை கதை

இதயம், நம் பிறப்பு தொடங்கி, சாகும்வரை இயங்குகிறது. அதை நாம் பாதுகாக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

“கல்லூரியில் படிக்கும்போது ஒரு நாளைக்கு 70 சிகரெட்டுகள் பிடிப்பேன். இயக்குநர் ஆன பிறகு, ஒரு நாளைக்கு 175 முதல் 180 சிகரெட்டுகளை வரை புகைத்திருக்கிறேன். இதனால் சீக்கிரத்தில் சோர்வடைந்து, ஓடியாடி என்னால் வேலை செய்ய முடியாமல் போனது.” என்றார்

அப்போது தான் இது தவறு என உணர்ந்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி புகைப்பழக்கத்தை அவர் நிறுத்தியதாகவும், நல்ல உணவுபழக்கத்தை கடைப்பிடித்து வருவதாகவும் கூறியிருந்தார் வெற்றிமாறன்.

Vetrimaran
வெற்றிமாறன்: "ராஜராஜ சோழன் இந்து மன்னர் இல்லை" - ஆதரவும், எதிர்ப்பும்!

மேலும், மாணவர்களிடம் உடலையும், மனதையும் பார்த்துக்கொள்ளும்படி கூறிய வெற்றிமாறன், சர்க்கரை பயன்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது, சரியான நேரத்தில் தேவையான உறக்கம் எவ்வளவு முக்கியம் எனவும் பேசியிருந்தார்.

“நல்ல உடல் நலம் இருந்தால் பாதிப்பு வராது என்று கூற முடியாது, ஆனால் வந்தால் அதனை எதிர்கொள்ள முடியும்” என்றார்

இதற்கு முன்னர் ஒரு முறை நேர்காணல் ஒன்றில், அவரது புகைப்பிடிக்கும் பழக்கத்தை பற்றி வெற்றிமாறன் பேசியிருந்தார்.

தான் எப்படி ஒரு செயின் ஸ்மோக்கர் ஆக இருந்து பின் அந்த பழக்கத்தை முற்றிலுமாக துறந்தார் என்பது குறித்து பகிர்ந்திருந்தார்.

அந்த நேர்காணலில் அவர் தான் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட முக்கிய காரணமாக இருந்தது கௌதம் மேனன் இயக்கிய வாரனம் ஆயிரம் படம் என்பதையும் கூறியிருந்தார்.

“நவம்பர் 14, 2008. வாரணம் ஆயிரம் படம் பார்த்துவிட்டு வந்து நான் புகைப்பிடித்தேன். அது தான் என் கடைசி சிகரெட். அதன் பிறகு பழக்கத்தை விட்டுவிட்டேன்” என்று கூறியிருந்தார் வெற்றிமாறன்

Vetrimaran
காஷ்மீர் ஃபைல்ஸ்: "தவறை நிரூபித்தால் படம் இயக்குவதை விட்டுவிடுகிறேன்" - இயக்குநர் சவால்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com