பொதுவாக பண்டிகை காலம் என்றாலே கொண்டங்களுக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் தீபாவளி என்றாலே சொல்லவே வேண்டாம், ஒளியும் வண்ணமும் தான் வீட்டின் முக்கிய அலங்காரமாக இருக்கும்.
வீட்டிற்கு வெளிச்சத்தைக் கொண்டு வரும் தீபாவளியில் வீட்டை எப்படியெல்லாம் அலங்கரித்து கொண்டாடலாம் என்று பார்க்கலாம்.
தீபாவளிக்காகவே சந்தைகளில் காகிதங்களால் தயாரிக்கப்பட்ட தோரணங்கள் அழகழகாகக் கிடைக்கின்றன.
தற்காலிக அழகிற்காக அவற்றை வாங்கி வீட்டில் கட்டிவிடுங்கள். அவை வீட்டிற்கு வண்ணம் சேர்க்கும்.
பண்டிகை காலங்களில் கைகளை அலங்கரிக்க மெஹந்தி உதவுவது போன்று வீட்டை அலங்கரிக்க ரங்கோலி ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.
யூடியூபில் பல ரங்கோலி டிசைன்கள் உள்ளன. தற்போது ரங்கோலி வரைய ரெடிமேட் தட்டுகள் விற்கப்படுகின்றன. அவற்றை வாங்கி கலர் மாவைத் தூவினால் போதும் வீட்டை இன்ஸ்டென்டாக அழகாய் மாற்றிவிடும் ரங்கோலி.
முன்பெல்லாம் பனை ஓலை தோரணம், பிறகு கலர் காகிதம், தற்போது தோரணமாக சீரியல் லைட்டுகள் டிரெண்டில் உள்ளன.
அவற்றை மீட்டர் கணக்கில் வாங்கி தேவையான இடங்களில் கட்டலாம். இவை இன்னும் வீட்டிற்கு வெளிச்சத்தை தரும்.
தீபாவளிக்கு வீட்டு அலங்காரத்திற்கு விளக்குகள் போலவே பூக்களும் அவசியம்.
வெவ்வேறு பூக்களை கொண்டு உங்கள் முழு வீட்டையும் எளிதாக அலங்கரிக்கலாம்.
பூக்களைப் பயன்படுத்தும்போது அலங்காரத்தை மட்டுமில்லாமல் அது ஒரு தெய்வீக பிரகாசத்தை அளிக்கிறது.
உங்களுக்கு பிடித்தமான டிசைன்களில் சுவர்களை கேன்வாஸ் ஓவியங்கள் மூலம் அலங்கரிக்கலாம்.
இந்த தீபாவளியை இன்னும் சிறப்பாக அழகாக மாற்ற இது போன்ற விஷயங்கள் மிக முக்கியம்!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust