பூனைகளை காப்பாற்ற வீட்டை மியூசியமாக மாற்றிய அமெரிக்க தம்பதி - திரட்டிய நன்கொடை எவ்வளவு?

கின்னஸ் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற இலக்கையும் கொண்ட அமெரிக்கா தம்பதியினர், தங்கள் வீட்டை பூனைகள் சம்பந்தமான சேகரிப்புகளின் "மியூசியம்" ஆக மாற்றியுள்ளனர்.
Cat
CatTwitter
Published on

கடந்த 4 ஆண்டுகளில் 13,000 க்கும் மேற்பட்ட தனித்துவமான பூனை சம்மந்தப்பட்ட கலைப்பொருட்கள் மற்றும் பழங்கால பொருட்களை சேகரித்து தங்களின் வீட்டை அருங்காட்சியகமாக மாற்றியுள்ளனர் இந்த காதல் தம்பதி. இவை அனைத்தும் பழங்கால கடைகளிலிருந்து வாங்கப்பட்டவை எனவும் கூறுகின்றனர்.

இவர்கள் தங்கள் அருங்காட்சியகத்தின் மூலம் பணம் திரட்டி வருகின்றனர். அந்த பணத்தைக் கொண்டு பூனைகளுக்குத் தங்குமிடங்கள் மற்றும் மீட்புப் பணிகளுக்கு நன்கொடை அளிக்கின்றனர்.

கின்னஸ் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற இலக்கையும் கொண்ட அமெரிக்கா தம்பதியினர், தங்கள் வீட்டை பூனைகள் சம்பந்தமான சேகரிப்புகளின் "மியூசியம்" ஆக மாற்றியுள்ளனர்.

Cat
ஆன்லைன் வகுப்பில் பூனை- பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ரூ. 4.8 லட்சம் இழப்பீடு

2020 ஆம் ஆண்டில் தங்கள் வீட்டை பூனை சிலை மியூசியமாக மாற்றியபோது ஆரம்பத்தில் 4,000 பொருட்களை மட்டும் காட்சிக்கு வைத்ததாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் இவர்களின் மற்றொரு இலக்காக தற்போது இருப்பது, இந்த அருங்காட்சியகத்தை ஒரு காபி ஷாப்பாக மாற்றுவது தான். காபி ஷாப்பிற்கு வரும் வாடிக்கையாளர்கள் விரும்பினால் பூனைகளை வீட்டிற்குக் கொண்டு செல்லலாம். பின்னர் அருங்காட்சியகம் ஒரு பக்கமும் காபி ஷாப் ஒரு பக்கமும் செயல்படும் என அந்த தம்பதியினர் கூறுகின்றனர்.

Cat
பூனை வளர்ப்பவரா நீங்கள்? அது குறித்த இந்த 5 ஆச்சர்ய உண்மைகள் தெரியுமா?
Cat
Catcanva

மேலும் பார்வையாளர்கள், தன்னார்வ நன்கொடைகள் மூலம் திரட்டப்பட்ட பணம் பூனை மீட்புக்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது என்றும் கூறுகின்றனர்.

ஆகஸ்ட் 2020 இல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டதிலிருந்து தம்பதியினர் தங்குமிடங்களுக்காக $2,000 (கிட்டத்தட்ட ரூ. 1.6 லட்சம்) திரட்டியுள்ளனர். தம்பதியின் இந்த செயல் இணையவாசிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Cat
அமெரிக்கா : ஒரு நாள் மேயராக பதவி வகித்த பூனை - எப்படி சாத்தியம் ?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com