ஈரோட்டில் அமைந்திருக்கும் ’’இலங்கை தீவு” குறித்து தெரியுமா? சூப்பர் பட்ஜெட் ஸ்பாட்!

ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் இந்த அழகிய இலங்கை தீவிற்கு ஒரே நாளில் கம்மி பட்ஜெட்டில் சென்று வரலாம். ஈரோட்டில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் காங்கேயம் பாளையம் என்ற இடத்தில் தான் இந்த தீவு அமைந்திருக்கிறது.
Do you know about Srilanka Island located in Erode? Super budget spot
Do you know about Srilanka Island located in Erode? Super budget spotTwitter
Published on

ஒரு டிப்ரிப் செல்ல வேண்டும் என்றாலே வெளிமாநிலம், வெளிநாடு என பிளான் செய்கிறார்கள். ஆனால் உள்ளூரிலேயே பல இடங்கள் உள்ளன.

தமிழ்நாடு என்று எடுத்துகொண்டால் பழமையான பாரம்பரிய கலாச்சாரங்கள், குளிர் பிரதேசங்கள், கண்கவர் கடற்கரைகள், திகிலூட்டும் இடங்கள், காலத்தால் அழியாத கோட்டைகள், உலகப் புகழ்பெற்ற கோயில்கள் என மாநிலம் முழுவதும் பார்க்க பல இடங்கள் உள்ளன.

அந்த வரிசையில் தமிழ்நாட்டில் இருக்கும் தீவு குறித்து தான் இங்கு சொல்ல போகிறோம்.

ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் இந்த அழகிய இலங்கை தீவிற்கு ஒரே நாளில் கம்மி பட்ஜெட்டில் சென்று வரலாம்.

ஈரோட்டில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் காங்கேயம் பாளையம் என்ற இடத்தில் தான் இந்த தீவு அமைந்திருக்கிறது.

சுற்றிலும் காவிரி ஆற்றின் தண்ணீர் கடல் போல் காட்சியளிக்க, அதன் நடுவில் அமைந்துள்ள இந்த தீவில் ஒரு சிவன் கோவிலும் உள்ளது.

Do you know about Srilanka Island located in Erode? Super budget spot
Summer vacation : வெறும் 30 ரூபாய் போதுமா? கிருஷ்ணகிரியில் இருக்கும் சூப்பர் பட்ஜெட் Spot

இந்த கோவில் கிட்டத்தட்ட சுமார் 3000 ஆண்டுகள் பழமையானதாகவும், 10ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

காவிரி ஆற்றை கடந்து பாறை மேல் கட்டப்பட்டுள்ள இந்த கோவிலுக்கு செல்வதற்கு பரிசல் பயணம் பயன்படுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது கரையிலிருந்து கோவிலுக்கு செல்ல பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் இங்கு ஈசியாக சென்று வர முடியும்.

வார இறுதியில் இந்த இடத்திற்கு நண்பர்களுடனோ, குடும்பத்தினருடனோ சென்று வரலாம்.

Do you know about Srilanka Island located in Erode? Super budget spot
ஊட்டி : மலை வாசஸ்தலத்தில் மறைக்கப்பட்ட ”பனிச்சரிவு ஏரி” குறித்து தெரியுமா? பட்ஜெட் Spot

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com