அதிமுக பொதுக்குழு அதற்கு தடையில்லை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. பொது குழுவிற்கு தடைவிதிக்க கோரிய ஓ பன்னீர் செல்வத்தின் கோரிக்கை நிராகரிப்பு. கட்சியின் உள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கருத்து
பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த பொதுக்குழுவுக்குத் தடை கோரி ஓ.பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்திருக்கிறார். சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது. அந்தத் தீர்ப்பை பொறுத்தே அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா? என்பது தெரியவரும்.
இந்நிலையில், பொதுக்குழுவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி காலை 6.45 மணிக்கே தனது வீட்டில் இருந்து புறப்பட்டு பொதுக்குழு நடைபெறும் வானகரம் நோக்கிச் செல்கிறார். ஓ.பன்னீர் செல்வம் வீட்டிலும் அவரது ஆதரவாளர்களும் குவிந்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு மாடவீதிகளில் வாகன சேவை நடத்த ஏற்பாடுகள் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். திருமலை அன்னமய பவனில் பக்தர்களிடம் குறை கேட்கும் நிகழச்சியில் பேசிய தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, "திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற செப்டம்பர் 27 தொடங்கி அக்டோபர் 5 வரை 9 நாட்கள் நடக்கிறது. கொரோனா தொற்று முடிந்த பிறகு 2 ஆண்டுகள் கழித்மு கோயிலின் நான்கு மாட வீதிகளில் வாகன சேவைகளை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பக்தர்கள் கேலரிகளில் அமர்ந்து சாமி தரிசனம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன." என்றார்
ஊழல் நடைபெற்றது குறித்த புகாரின் காரணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் இங்கிலாந்து சுகாதார மந்திரி சாஜித் ஜாவித், இந்திய வம்சாவளி எம்.பி.யான ரிஷி சுனக் உள்ளிட்ட உயர் பதவியில் உள்ள 30 பேர் பதவி விலகினர். மொத்தம் 58 மந்திரிகள் ஆட்சியிலிருந்து வெளியேறினர். இதனால், பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். இந்நிலையில், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் விலகினார். புதிய பிரதமராக கலர் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், இங்கிலாந்து புதிய பிரதமர் பதவிக்கான போட்டியில் அந்நாட்டு வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் இறங்கியுள்ளார். கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் அவர் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் 2 டி 20 போட்டிகளில் இந்தியா வென்றிருந்தது. இந்நிலையில் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 215 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 198 ரன்கள் எடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் 2-1 என்ற நிலையில் இந்தியா தொடரை வென்றது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust