ஈரோடு : பவானி முதல் சத்தியமங்கலம் வரை - சுற்றிப்பார்க்க சிறந்த இடங்கள் என்ன?

தவிர பல காடுகள் ஈரோட்டில் இருக்கின்றன. இங்கு யானை, புலி, சிறுத்தை, செந்நாய், காட்டுப்பன்றிகள், காட்டு மாடுகள், மான்கள் போன்ற விலங்குகளும் பல அரியவகைத் தாவரங்களும் வளருகின்றன.
ஈரோடு : பவானி முதல் சத்யமங்கலம் வரை - சுற்றிப்பார்க்க சிறந்த இடங்கள் என்ன?
ஈரோடு : பவானி முதல் சத்யமங்கலம் வரை - சுற்றிப்பார்க்க சிறந்த இடங்கள் என்ன?Twitter
Published on

ஈரோடு மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளதால் இயற்கை வளம் மிக்க பகுதியாக இருக்கிறது.

சத்தியமங்க்கலம் புலிகள் காப்பகம் ஈரோட்டை மையமாகக் கொண்டு இயங்குகிறது.

தவிர பல காடுகள் ஈரோட்டில் இருக்கின்றன. இங்கு யானை, புலி, சிறுத்தை, செந்நாய், காட்டுப்பன்றிகள், காட்டு மாடுகள், மான்கள் போன்ற விலங்குகளும் பல அரியவகைத் தாவரங்களும் வளருகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் 15 பழங்குடியினர் கிராமங்கள் உள்ளது. சந்தன மரக்கிடங்கும் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் சுற்றிப்பார்ப்பதற்கு வேறென்ன விஷயங்கள் இருக்கிறது காணலாம்.

 சங்கமேஸ்வரர் கோவில்
சங்கமேஸ்வரர் கோவில்

பவானி

ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் மிக முக்கியமான ஆறு பவானி. காவிரி, பவானி மற்றும் அமுதநதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. சித்திரை தேர் திருவிழா முக்கியமான திருவிழா ஆகும். ஈரோட்டிலிருந்து 15கி.மீ. தொலைவில் பவானி கூடுதுறை அமைந்துள்ளது.

பண்ணாரி அம்மன் கோவில்
பண்ணாரி அம்மன் கோவில்

பண்ணாரிஅம்மன் கோவில்

காட்டுப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவில் தமிழகத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பெற்றதாகும். ஏனெனில் இங்கு அம்மன் சுயம்பு வடிவமாக அமைந்துள்ளது.

கோவிலில் உள்ள மண்டபங்கள், தூண்கள் சிற்ப வேலைபாடுகள் மிகுந்து காணப்படும். ஆண்டு தோறும் பங்குனி மாதம் இங்கு திருவிழா நடத்தப்படும்.

பண்ணாரி அம்மன் கோவில் கோவையிலிருந்து 83கி.மீ. வடகிழக்கே பவானிசாகர் அணைக்கட்டிலிருந்து சத்தியமங்கலத்திலிருந்தும் 10 கி.மீ.வடமேற்கே மைசூர் செல்லும் சாலையில் அமைந்தள்ளது.

கொடிவேரி அணை

பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பு அணை கொடிவேரி. இங்கு நீர்த்தேக்கம் மற்றும் இயற்கையான சுற்றுச்சூழல் பகுதிகளைக் காணாலாம்.

உள்ளூர்வாசிகளுக்கு இது சிற பொழுதுபோக்குத் தளமாகத் திகழ்கிறது. படகு சவாரி, பூங்கா ஆகியன உள்ளன. ஈரோட்டில் இருந்து 65 கி.மீ தொலைவில் இந்த அணைக்கட்டு அமைந்துள்ளது.

சென்னி மலை

சென்னிமலை சுப்ரமணியசுவாமி கோவில் பழமையான மற்றும் பிரபலமான கோவில் ஆகும். மலையின் மீது அமைந்துள்ள கோவிலுக்கு செல்ல 1320 படிக்கட்டுகள் உள்ளது. வாகனங்கள் செல்ல 4கி.மீ. தார்சாலையும் உள்ளது.

மகாமண்டபம், கலையெழில் மிக்கவிதானம் வள்ளி தெய்வாணை சிற்பங்கள் இக்கோவிலில் சிறப்புக்கு பெருமை சேர்ப்பவையாகும்.

தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம் ஆகிய திருவிழாக்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

ஈரோடு : பவானி முதல் சத்யமங்கலம் வரை - சுற்றிப்பார்க்க சிறந்த இடங்கள் என்ன?
பழங்குடியினர் உருவாக்கிய வேர்ப் பாலம் : மேகாலயாவின் சுற்றுலா அடையாளமாக மாறியது எப்படி?

பவானிசாகர் அணை

பவானிசாகர் அணைக்கட்டு ஈரோட்டிலிருந்து 76கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் இரண்டாவது பெரிய அணையாக விளங்குகிறது.

பவானிசாகரின் நீர்த்தேக்கப்பகுதி மலைகள் சூழ்ந்த எழில் நிறைந்த இயற்கை காட்சியுடன் திகழ்கிறது. இங்கு பெரிய பூங்கா ஒன்று பவானிசாகாpல் அமைந்துள்ளது.

வெள்ளோடு பறவைகள் சரணாலயம்

வெள்ளோடு பறவைகள் சரணாலயம் ஈரோட்டில் இருந்து 15 கி.மீ. தொலைவில் 200 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது.

சரணாலயத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் ஆண்டுதோறும் வருகை தருகின்றன.   

சில எளிதில் கண்டுபிடிக்கப்பட்ட பறவை இனங்கள் தேன், பிந்தில் வாத்துகள், பெலிகன்கள் ஆகியவை அடங்கும்.

ஈரோடு : பவானி முதல் சத்யமங்கலம் வரை - சுற்றிப்பார்க்க சிறந்த இடங்கள் என்ன?
பெரியார் ஏரி முதல் வோல்டா வரை : உலகெங்கிலும் நீரில் மூழ்கிய காடுகள் குறித்து தெரியுமா?

வண்ணபூரணி சுற்றுலா திட்டம்

சத்தியமங்கலம் காட்டுக்குள் உள்ள இயற்கை அழகை கண்டுகளிக்க இந்த சுற்றுலாத்திட்டம் வனத்துறையினரால் நடத்தப்படுகிறது.

இது மொத்தம் 6 இடங்களில் செயல்படுகிறது.

ஈரோடு : பவானி முதல் சத்யமங்கலம் வரை - சுற்றிப்பார்க்க சிறந்த இடங்கள் என்ன?
கீழடி அவிழும் மர்மம்: குதிரை எலும்புகள் ஏன் கவனிக்க வேண்டியவை? - சவால்விடும் மதுரை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com