ஈரோடு: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் VS கே.எஸ்.தென்னரசு - முன்னிலை குறித்து கூறியது என்ன?

இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை பெற்றுள்ளதால் திமுக, காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
 இளங்கோவன் பேட்டி
இளங்கோவன் பேட்டி Twitter
Published on

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற்றது.

இதில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இடைத்தேர்தலில் மொத்தம் 398 தபால் வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 106 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 16 தபால் வாக்குகளை பெற்றிருந்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 46,116 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விவரம் :

காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் : 53,548

அதிமுக வேட்பாளர் தென்னரசு : 19,934

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா : 2964

தேமுதிக வேட்பாளர் ஆனந்த் : 431

பிற : 261

இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை பெற்றுள்ளதால் திமுக, காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

 இளங்கோவன் பேட்டி
காங்கிரஸ் உறுப்பினர்களால் கடத்தப்பட்ட இந்திய விமானம்: ஒரு சுவாரஸ்ய வரலாறு

இதனை தொடர்ந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியதாவது:

இந்த வெற்றி எதிர்பார்த்த ஒன்று தான், இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கே இந்த பெருமை சேரும்.

சட்ட மன்ற தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை 80% நிறைவேற்றியதன் காரணமாக மக்கள் இந்த அங்கீகாரத்தை கொடுத்துள்ளனர்.

ராகுல் காந்தி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அன்பையும் பாசத்தையும் இந்த வெற்றி மூலம் காண்பித்துள்ளனர்.

எனது முக்கிய குறிக்கோளாக இருப்பது, ஈரோடு மக்களின் கோரிக்கைகளை கேட்டு அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பது தான்!

ஸ்டாலின் என்னை விட வயதில் சிறியவர் என்றாலும், அவரின் செயலாலும், ஞானத்தாலும் பல மடங்கு உயர்ந்தவர். அவருடன் நெருக்கமாக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.

இரவு பகல் பாராது அயராது திமுகவினர் உழைத்தார்கள் என்று வெற்றி குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசினார்.

 இளங்கோவன் பேட்டி
”திமுக - பாஜக கூட்டணி வைத்தால் எதிர்ப்பேன்” சவுக்கு சங்கர் அதிரடி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com