காங்கிரஸ் உறுப்பினர்களால் கடத்தப்பட்ட இந்திய விமானம்: ஒரு சுவாரஸ்ய வரலாறு

அந்த விமான கடத்தலில் நடந்தது என்ன? கடத்தல்காரர்கள் வைத்த கோரிக்கைகள் என்ன? விமானத்தில் இருந்த பயணிகள் எப்படித் தப்பித்தனர்? விமானத்தை கடத்தியவர்கள் என்ன ஆனார்கள்?
காங்கிரஸ் உறுப்பினர்களால் கடத்தப்பட்ட இந்திய விமானம்: ஒரு சுவாரஸ்ய வரலாறு
காங்கிரஸ் உறுப்பினர்களால் கடத்தப்பட்ட இந்திய விமானம்: ஒரு சுவாரஸ்ய வரலாறு twitter

பொதுவாக எந்த ஒரு நாட்டைச் சேர்ந்த பயணிகள் விமானம் கடத்தப்பட்டாலும் அது பல நாடுகளில் தலைப்புச் செய்தியாகிவிடும். விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? விமானத்தை கடத்தியவர்கள் வைக்கும் கோரிக்கைகள் என்ன? அதற்கு சம்பந்தப்பட்ட நாட்டின் அரசாங்கம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என ஊடகங்களில் மிகப்பெரிய விவாதங்களே நடக்கும்.

ஆனால் இந்தியாவில் 1978 ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி நடந்த விமானக் கடத்தல் சம்பவம், அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஒரு டுவிஸ்ட்டோடு முடிவுக்கு வந்தது.

அப்படி அந்த விமான கடத்தலில் நடந்தது என்ன? கடத்தல்காரர்கள் வைத்த கோரிக்கைகள் என்ன? விமானத்தில் இருந்த பயணிகள் எப்படித் தப்பித்தனர்? விமானத்தை கடத்தியவர்கள் என்ன ஆனார்கள்?

வாருங்கள் பார்ப்போம்

காங்கிரஸ் உறுப்பினர்களால் கடத்தப்பட்ட இந்திய விமானம்: ஒரு சுவாரஸ்ய வரலாறு
50 பயணிகளை மறந்துவிட்டு சென்ற விமானம் : மன்னிப்பு கோரிய நிறுவனம் - என்ன நடந்தது?

ஐ சி 410 விமானம்:

இந்தியாவின் முன்னாள் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அவர்கள் 1975 ஆம் ஆண்டு கொண்டு வந்த அவசர சட்டத்தின் காரணமாக ஒட்டுமொத்த இந்திய தேசமே சிறைக் கூண்டில் அடைக்கப்பட்டது. இந்த அவசரச்சட்டம் 1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திரும்பப்பெறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்து, ஜனதா கட்சி ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. பழம்பெரும் அரசியல்வாதியான மொரார்ஜி தேசாய் இந்தியாவின் பிரதமராக இருந்தார்.

ஆளுங்கட்சியாக இருந்த ஜனதா கட்சி இந்திரா காந்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி அவரை சிறையில் அடைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் 1978 ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி போலாநாத் பாண்டே மற்றும் தேவேந்திர பாண்டே ஆகிய இருவர் ஐ சி 410 என்கிற போயிங் 737 - 200 ரக விமானத்தைக் கடத்தினார்.

இவர்கள் கடத்திய விமானத்தில் 126 பயணிகள் (இதில் இரு கடத்தல் காரர்களும் அடக்கம்), 6 விமான நிறுவன ஊழியர்கள் இருந்தனர். கடத்தலுக்கு சில பொம்மை துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை பயன்படுத்தினர் என்பதே முதல் வேடிக்கை.

அந்த விமானத்தில் முன்னாள் இந்திய ஒன்றிய அமைச்சர்களான ஏ கே சென் மற்றும் தரம்பீர் சின்ஹா ஆகியோரும் இருந்தனர்.

கொல்கத்தாவில் இருந்து லக்னோ நகரத்துக்கு சென்று கொண்டிருந்த விமானத்தை கடத்தி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி விமான நிலையத்தில் விமானம் நிலை நிறுத்தப்பட்டது.

சிறையில் வைக்கப்பட்டிருக்கும் இந்திரா காந்தி விடுவிக்கப்பட வேண்டும், அவருக்கும் அவருடைய மகன் சஞ்சய் காந்திக்கும் எதிராக போடப்பட்டிருக்கும் வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட வேண்டும் என்பதே கடத்தல்காரர்களின் முக்கிய கோரிக்கைகளாக இருந்தன.

விமான கடத்தல் சம்பவம் அரங்கேறிக் கொண்டிருந்தபோதே போலா பாண்டே மற்றும் தேவேந்திர பாண்டே ஆகிய இருவரும் தங்களை இந்திரா காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் என்று அழைத்துக் கொண்டனர். மேலும் தாங்கள் காந்தியவாதிகள் என்றும் யாரையும் துன்புறுத்த விரும்பவில்லை என்றும் கூறியது வேடிக்கையிலும் வேடிக்கையான விஷயம்.

காங்கிரஸ் உறுப்பினர்களால் கடத்தப்பட்ட இந்திய விமானம்: ஒரு சுவாரஸ்ய வரலாறு
ஓமன் : ஓர் அரபு நாட்டின் அசுர வளர்ச்சி - வியக்க வைக்கும் சுவாரஸ்ய வரலாறு

1978 காலகட்டத்தில் உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்த ராம் நரேஷ் யாதவ், இந்த விமானக் கடத்தல்காரர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். மறுபக்கம் எஸ் கே மோடி என்பவர் விமானத்தின் பின்பக்க கதவை திறந்து விமானத்தில் இருந்து குதித்து தப்பினார்.

கடைசிவரை பேச்சுவார்த்தை நீண்டதே ஒழிய, கடத்தல்காரர்களின் எந்த வித கோரிக்கைகளுக்கும் அரசு செவி சாய்க்கவில்லை.

ஒரு கட்டத்தில் விமானத்தின் அவசர காலக் கதவுகள் திறக்கப்பட்ட போது கிட்டத்தட்ட பாதி பயணிகள் தப்பியோடினர். மறுபக்கம், அதிகாரிகள் கடத்தல்காரர்களில் ஒருவரின் தந்தையை அழைத்து கடத்தல்காரர்களோடு பேச வைத்தனர்.

அதுவரை வீராவேசமாக வசனம் பேசிக் கொண்டிருந்த கடத்தல்காரர்களின் மனநிலையில் பெரிய மாற்றம் தெரிந்தது. இரண்டு கடத்தல்காரர்களும் ஏதோ பிக் பாக்கெட் திருடர்களைப் போல விமானத்தில் இருந்து வெளியேறி இந்திரா காந்திக்கு ஆதரவாக முழக்கமிட்டபடி காத்துக் கொண்டிருந்த அதிகாரிகளிடம் சரணடைந்தனர்.

இப்படியாக ஐசி 410 விமான கடத்தல் பிசுபிசுத்து போனது. நல்லவேளையாக பயணிகளுக்கோ, விமான ஊழியர்களுக்கோ எந்தவித காயமும் ஏற்படவில்லை. அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

காங்கிரஸ் உறுப்பினர்களால் கடத்தப்பட்ட இந்திய விமானம்: ஒரு சுவாரஸ்ய வரலாறு
Pablo Escobar : உலகை மிரள வைத்த கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபர் வரலாறு! | News Sense

போலா பாண்டே மற்றும் தேவேந்திர பாண்டேவின் எதிர்காலம் என்ன ஆனது?

1980 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இருவருக்கும் சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட கட்சி சீட்டு கொடுத்தது. இருவருமே தேர்தலில் வெற்றி பெற்று உத்தர பிரதேச சட்டமன்றத்தில் உறுப்பினர்களாக நுழைந்தனர்.

1980 முதல் 1985ஆம் ஆண்டு வரையும், 1989 முதல் 1991 வரையும் சட்டமன்ற உறுப்பினராக பதவியில் இருந்தார் போலா பாண்டே.

தேவேந்திர பாண்டேவும் இரண்டு முறை உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். காலப்போக்கில் தேவேந்திர பாண்டே, உத்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து வெளியேறினார்.

போலா பாண்டே நாளடைவில் இந்திய காங்கிரஸின் இளைஞர் அணிப் பொதுச் செயலாளராகவும், அதையும் தாண்டி ஒரு கட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸின் செயலாளர்களில் ஒருவராகவும் பதவி உயர்ந்தார்.

1991, 1996, 1999, 2004, 2009, 2014 என பல மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு தொடர்ந்து தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com