துருக்கி - சிரியா : கோவையில் நிலநடுக்கம் ஏற்படும் அச்சம் - அதிகாரிகள் கூறுவதென்ன?

தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை ( SDRF) மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, இதுபோன்ற பேரிடர்களில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்” என்று அந்த அதிகாரி கூறினார்.
Fear in quake-prone Kovai after temblor hits Turkey
Fear in quake-prone Kovai after temblor hits TurkeyTwitter

துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 30,000க்கும் மேற்பட்டோர் பலியாகினர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்த மாவட்ட நிர்வாகங்களின் மூத்த அதிகாரிகள், கலெக்டர் அலுவலகத்தில் டிஜிட்டல் நில அதிர்வு வரைபடத்தை நிறுவுமாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் (டிஎன்எஸ்டிஎம்ஏ) வலியுறுத்தியுள்ளனர்.

கோயம்புத்தூர் நில அதிர்வு மண்டலம் III இல் மிதமான நிலநடுக்கம் ஏற்படும் அபாயத்தில் உள்ளது, சில நிமிடங்கள் நீடிக்கும் இந்த நடுக்கம் ஆபத்தானதாக நிரூபிக்கப்படலாம் என்று அதிகாரி ஒருவர் TOI க்கு தெரிவித்திருக்கிறார்.

“1904 ஆம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்டபோது பெரும் சேதம் எதுவும் ஏற்படவில்லை, ஏனெனில் பெரும்பாலான மக்கள் குடிசைகளில் தங்கியிருந்தனர். இப்போது, ​​நகரம் பல வானளாவிய கட்டிடங்களுடன் கான்கிரீட் காடாக மாறிவிட்டது,” என்றார்.

நிர்வாகம் 2018 முதல் பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் (TNSDMA)இருந்து டிஜிட்டல் நில அதிர்வு வரைபடத்தை கேட்டுள்ளதாக என்று மற்றொரு அதிகாரி கூறினார்.

நில அதிர்வு வரைபடத்திற்காக TNSDMA இன் தலைவரான வருவாய் நிர்வாக ஆணையர் (CRA) ”அலுவலகத்திற்கு கடிதங்கள் அனுப்பி வருகிறோம், ஆனால் பதில் வரவில்லை” என்றார்

”துருக்கி நிலநடுக்கத்தில் 19,000 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பூகம்ப பாதுகாப்பு குறிப்புகள் பற்றி தமிழக மக்கள் அறிந்திருக்கவில்லை, பூகம்பம் ஏற்பட்டால் தங்களை எப்படி பாதுகாத்து கொள்வார்கள்.

தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை ( SDRF) மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, இதுபோன்ற பேரிடர்களில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்” என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

இதற்கிடையில், கோவை கலெக்டர் கிராந்தி குமார் கூறுகையில், விரைவில் பொது இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த NDRF மற்றும் SDRF மூலம் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Fear in quake-prone Kovai after temblor hits Turkey
துருக்கி நிலநடுக்கம் : உலக வரைப்படத்தை மாற்றி அமைத்த 10 பூகம்பங்கள் - விரிவான தகவல்கள்

புவி அறிவியல் அமைச்சகம் 2018 ஆம் ஆண்டில் மாவட்டத்தில் நிலநடுக்க அபாய மதிப்பீட்டிற்காக நிலநடுக்க அபாய மைக்ரோசோனேஷன் என்ற பெயரில் மண் பரிசோதனைகளை நடத்தியது.

மருதமலையில் உள்ள விஜய் நகர், நால்வர் நகர், வடவள்ளியில் உள்ள சின்மயா நகர், வடவள்ளியில் உள்ள விஓ நகர், பிஎன் புதூர் பிரிவு, கணுவாய், கேஎன்ஜி புதூர், டிவிஎஸ் நகர், ஆனைகட்டி சாலை, முல்லை நகர் ஆகிய இடங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

இருப்பினும், விரிவான ஆய்வு அறிக்கையை அமைச்சகம் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்படத்தக்கது.

Fear in quake-prone Kovai after temblor hits Turkey
”இந்தியாவில் நிலநடுக்கம் வரும்” துருக்கி பூகம்பத்தை முன்பே கணித்த நபரின் அடுத்த ட்வீட்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com