துருக்கி, சிரியா உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படும் என்று முன்பே கணித்த ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ் இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்படும் என்று கணித்திருக்கிறார். இவரது இந்த ட்வீட் தற்போது மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது
கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி அதிகாலை 4.17 மணியளவில் துருக்கியில் பயங்கர நிலநிடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. வரலாற்றிலேயே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவென கருதப்படுகிறது.
பல கட்டிடங்கள் இடிந்துவிழுந்து, இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 8000த்தை கடந்திருந்தது.
துருக்கியில் மட்டுமல்லாமல் சிரியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. துருக்கியில் உதவிகள் வழங்கப்படுவதற்கு இருக்கும் வசதிகள் சிரியாவில் இல்லை என்பதையும் உலக சுகாதார அமைப்பு நேற்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த நில அதிர்வுகள் சிரியா, லெபனன், துருக்கி உள்ளிட்ட நாடுகளை தாக்கும் என்று சோலார் சிஸ்டம் ஜியோமெட்ரி சர்வேயின் (SSGEOS) ஆராய்ச்சியாளர் ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ், பிப்ரவரி 3 அன்று ட்வீட் செய்திருந்தார்.
அதேபோல பிப்ரவரி ஆறாம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து ஆராய்ச்சியாளர் ஃபிராங்க் இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்படும் என்று கணித்திருக்கிறார்.
இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் தொடங்கி, பாகிஸ்தான் வழியாக பயணித்து இந்தியாவை அடையும் எனவும், இந்திய பெருங்கடலில் சென்று இது முடிவடையும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust