கொடைக்கானல் : ஏரியில் உருவாகிறதா மிதவை உணவகம்? நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள் என்ன?
கொடைக்கானல் : ஏரியில் உருவாகிறதா மிதவை உணவகம்? நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள் என்ன? Twitter

கொடைக்கானல் : ஏரியில் உருவாகிறதா மிதவை உணவகம்? நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள் என்ன?

கொடைக்கானல் என்று எடுத்துக்கொண்டால் கோக்கர்ஸ் வாக், பைன் மரக்காடுகள், பியர் ஷோலா நீர்வீழ்ச்சி, வெள்ளி நீர்வீழ்ச்சி, கொடைக்கானல் அறிவியல் வானாய்வகம், செண்பகனூர் அருங்காட்சியம், மன்னவனூர் சூழல் சுற்றுலா, டால்பின் நோஸ் பாறை, குணா குகைகள், குறிஞ்சி ஆண்டவர் கோயில் என சுற்றி பார்ப்பதற்கு பல இடங்கள் உள்ளன.
Published on

பொதுவாக விடுமுறைக்கு குளர்ச்சியான இடத்தை தேடி செல்வது வழக்கம். தமிழகத்தை பொறுத்தவரை ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி, மூணார், ஏற்காடு, கொல்லி மலை, ஜவ்வாது மலை, சிறு மலை என்று எல்லா பக்கமும் மக்கள் குவிந்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக கொடைக்கானல் உள்ளூர் மக்களை மட்டுமல்லாமல் வெளிநாட்டினரையும் ஈர்த்து வருகிறது.

ஆண்டு முழுவதும் இதமான தட்ப வெப்ப நிலை இருக்கும் கொடைக்கானலுக்கு இந்த மாதம் செல்வது இன்னும் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும்.

கொடைக்கானல் என்று எடுத்துக்கொண்டால் கோக்கர்ஸ் வாக், தூண் பாறைகள், பிரையண்ட் பூங்கா, பைன் மரக்காடுகள், பியர் ஷோலா நீர்வீழ்ச்சி, வெள்ளி நீர்வீழ்ச்சி, கொடைக்கானல் அறிவியல் வானாய்வகம், செண்பகனூர் அருங்காட்சியம், மன்னவனூர் சூழல் சுற்றுலா, டால்பின் நோஸ் பாறை, பசுமைப் பள்ளத்தாக்கு, தற்கொலை முனை, பேரிஜம் ஏரி, குணா குகைகள், குறிஞ்சி ஆண்டவர் கோயில் என சுற்றி பார்ப்பதற்கு பல அழகிய இடங்கள் உள்ளன.

இது தவிர, கொடைக்கானல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர வடிவிலான ஏரி மக்களை அதிகமாக கவர்ந்து வருகிறது. இந்த ஏரியில் நகராட்சி சார்பில் படகுகள் இயக்கப்படுகின்றன.

கொடைக்கானல் : ஏரியில் உருவாகிறதா மிதவை உணவகம்? நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள் என்ன?
கொடைக்கானல் மூணாறை இணைக்கும் Escape Road - ஆங்கிலேயர் அமைத்த இந்த வழியில் செல்ல ஏன் தடை?

இந்த நிலையில் நகராட்சி சார்பில் ரூ.24 கோடி செலவில் நட்சத்திர ஏரியை மேலும் அழகுபடுத்த பணிகள் நடந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் சுற்றுலா வளர்ச்சித்துறை சார்பில் ஹெலிகாப்டர் இறங்கு தளம், மன்னவனூரில் சாகச சுற்றுலாத் தலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

அதே போல சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பக் கூடிய இடமாக இருக்கும் ஏரியில் மிதவை உணவகம் அமைக்க சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை அருகே முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் மிதக்கும் உணவகக் கப்பல் அமைக்கும் பணி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலாத் துறை அதிகாரிகள் மிதவை உணவகம் குறித்து கூறுகையில், கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளைக் கவர, சாகச சுற்றுலாவை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். மிதவை உணவகம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

கொடைக்கானல் : ஏரியில் உருவாகிறதா மிதவை உணவகம்? நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள் என்ன?
மதுரை To கொடைக்கானல்: உள்ளூர் மக்களை கவர ஒரு நாள் சுற்றுலா - எந்தெந்த இடங்கள் பார்க்கலாம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com