Morning News Today: தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கே.ஆர்.பி அணைக்கு தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகமாகி 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. எனவே அணையிலிருந்து விநாடிக்கு 1,117 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வெள்ளம்
வெள்ளம்Twitter
Published on

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தென்பெண்ணைஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியின் கே.ஆர்.பி அணைக்கு தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகமாகி 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. எனவே அணையிலிருந்து விநாடிக்கு 1,117 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Petrol
PetrolTwitter

பெட்ரேரோலில் 20 சதவிகித எத்தனாலைக் கலக்க மத்திய அரசு முடிவு!

டெ ல்லியில் நேற்று, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தின்போது, உயிர் எரிபொருள்களுக்காகத் தேசியக் கொள்கையில் திருத்தங்கள் செய்வதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் முக்கியத் திருத்தம் பெட்ரோலில் எத்தனால் கலப்பது குறித்தது. தற்போது பெட்ரோலில் 10 சதவிகித எத்தனால் கலக்கப்படுகிறது. ஆனால், பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனாலைக் கலக்கும் இலக்கை 2030-ம் ஆண்டுக்குள் எட்ட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த இலக்கை தற்போது 2025 -2026 ஆண்டுக்குள் அடைய வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

பெங்களூருவில் கடும் மழை வெள்ளம் - 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

பெங்களூருவில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. ஆனால், சில நாள்களுக்கு முன்பு கோடை மழை பெய்யத் தொடங்கியது. அசானி புயல் காரணமாக இந்த மழை வலுபெற்றது. விடாமல் கொட்டித் தீர்த்த மழை காரணமாகப் பல நூறு வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. மழை வெள்ளத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் பலியாகினர். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இந்த கடும் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்தார்.

வெள்ளம்
Assam: வெள்ளத்தில் தத்தளிக்கும் மாநிலம்- 7 பேர் பலி, 2 லட்சம் பேர் பாதிப்பு
மோடி - ஜோ பைடன்
மோடி - ஜோ பைடன்Twitter

குவாட் உச்சி மாநாடு: மோடி - ஜோ பைடன் சந்திப்பு!

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாடு, வருகிற 24-ம் தேதி ஜப்பானில் நடைபெற உள்ளது. இந்த குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜப்பான் செல்லவிருக்கிறார். அந்தச் சந்திப்பின்போது, அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார் என அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்திருக்கிறார்.

வெள்ளம்
கமல், சத்யராஜ், ஜி.வி. பிரகாஷ் குமார் : திரையுலகம் வரவேற்கும் பேரறிவாளன் விடுதலை
De Kock
De KockTwitter

ஐபிஎல் போட்டிகள் நிலவரம்

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இன்று நடைபெறும் போட்டியில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

வெள்ளம்
IPL 2022 : சாகும் வரை சண்டை செய்த கொல்கத்தா; டீ காக் செய்த தரமான சம்பவம் - 'மாஸ்' மேட்ச்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com