Weekly Recap : கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் - மருத்துவர்கள் தலைமறைவு; செக்‌ஷன் மாற்றம்

உள்ளூர் முதல் உலகம் வரை இந்த வாரம் பேசப்பட்ட முக்கிய செய்திகளை சுருக்கமாக காணலாம்.
கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்
கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்Twitter
Published on

இரண்டு பெண்களின் கொலை வழக்குகள் இந்தியா முழுவதும் பேச்சு பொருளாகியிருக்கின்றன. சென்னையைச் சேர்ந்த மாணவி பிரியாவின் இறப்பு பல நாட்களாக பேசப்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளின் இழிநிலை மீது வெளிச்சம் பாச்சியிருக்கிறது.

டெல்லியில் உயிரிழந்த ஷ்ரத்தாவின் மரணத்தில் பல திடுக்கிடவைக்கும் திருப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றனர். இன்னும் சில முக்கிய நிகழ்வுகள் பற்றி ஒரு ரீகேப் பார்க்கலாம்.

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் கால்பந்து வீராங்கனை பிரியா. கடந்த மாதம் 20 ஆம் தேதி அவரது காலில் வலி ஏற்பட்டுள்ளது. சுளுக்கு போல் இருப்பதாக பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது, சிகிச்சையின்போது மருத்துவர்கள் கவனக்குறைவால் மறுநாளே கால் பெரிய அளவில் வீங்கி இருக்கிறது.

இதையடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பிரியாவுக்கு ரத்த நாளங்களில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வலதுகாலை அகற்றியுள்ளனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பிரியா சிகிச்சை பலனின்றி நவம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மருத்துவர்கள் தலைமறைவு என்ற தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையில் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா வழக்கை, தமிழக காவல் துறை சந்தேக மரணம் என்ற பிரிவில் இருந்து கவனக்குறைவு (IPC 304 A) என்ற பிரிவிற்கு மாற்றியுள்ளது.

தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஷ்ரத்தா - அஃப்தாப் அமீன்
ஷ்ரத்தா - அஃப்தாப் அமீன்Twitter

டெல்லி : இளம்பெண்ணை 35 துண்டுகளாக வெட்டி கொலை செய்த காதலன்

26 வயதான ஷ்ரத்தாவும் அஃப்தாப் அமீன் என்பவரும் காதலித்து வந்த நிலையில் இருவரும் டெல்லியில் வாடகைக்கு வீடு எடுத்து லிவினில் இருந்து வந்தனர். திருமணம் தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்திருக்கிறது. வாக்குவாதம் முற்றி ஷ்ரத்தாவின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார் அஃப்தாப்.

ஷ்ரத்தாவின் தந்தை மகளை காணவில்லை என கொடுத்த புகாரின் பேரில் அஃப்தாப் கைது செய்யப்பட்டார். விசாரணையில் ஷ்ரத்தாவின் சடலத்தை 35 துண்டுகளாக வெட்டி, ஃப்ரிட்ஜுக்குள் வைத்து, அடுத்த 18 நாட்களில் அதனை வெவ்வேறு இடங்களில் அஃப்தாப் வீசி எறிந்துள்ளது தெரியவந்தது.

டேட்டிங் ஆப் மூலம் பழக்கம், ஷ்ரத்தாவின் நண்பர்களுக்கு தொடர்ந்து பேசி வந்து என தோண்ட தோண்ட பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த கொலை தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

சர்ச்சை கிளப்பிய சதீஸ்

சமீபத்தில் ஓ மை கோஸ்ட் படத்தின் டிரெய்லர் லான்ச் நடைபெற்றது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நகைச்சுவை நடிகர்கள் சதீஷ், யோகி பாபு மற்றும் நடிகை தர்ஷா குப்தா ஆகியோரும் நடித்துள்ளனர்.

டிரெய்லர் லான்ச் நிகழ்ச்சியின் போது மேடையில் நடிகர் சதீஷ் நடிகை தர்ஷா குப்தா மற்றும் சன்னி லியோனின் ஆடைகள் குறித்து பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதையடுத்து, நடிகர் சதீஷ் இது குறித்து விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் தர்ஷா தான் தன்னிடம் இதை பற்றி பேசியதாக கூறியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் பரவ, தர்ஷா இதற்கு டிவிட்டரில் பதிலளித்திருந்தார். சதீஷ் இப்படி பழியை என் மேல் போடுவது சரியா? என கேள்வியெழுப்பியவர், "யாராவது என்ன பத்தி ஸ்டேஜ் ல அசிங்கமா பேசுங்க னு சொல்லுவாங்களா?" எனக் காட்டமாக ட்வீட்டினார்.

இந்த விவகாரத்தில் மூடர் கூடம் இயக்குநர் நவீன் மற்றும் பாடகி சின்மயி உள்ளிட்டோர் கருத்து தெரிவித்திருந்தனர்.

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்
Oh My Ghost: தர்ஷா சன்னி லியோன் ஆடை விவகாரம் - சதீஷின் சொன்ன விளக்கம்; நடிகை பதிலடி

800 கோடியை தொட்ட உலக மக்கள் தொகை

ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் 2022 நவம்பர் 15 ஆம் தேதி உலக மக்கள் தொகை 800 கோடியை தொடும் என்று தெரிவித்திருந்தது. 700 கோடியிலிருந்த மக்கள் தொகை, 800 கோடியாக மாற 12 ஆண்டுகள் எடுத்துள்ளதாகவும் ஐநா கூறியுள்ளது.

ஐநாவின் கூற்றுப்படி, இந்தியாவின் மக்கள் தொகை 2023ஆம் ஆண்டில் சீனாவை விட அதிகமாகும் எனவும், உலகின் அதிக மக்கள் தொகை உள்ள நாடாக இந்திய முதலிடம் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உலக மக்கள் தொகை 2030ல் 8.5 கோடி, 2050ல் 9.7 கோடியை அடையும் எனவும் ஐநா தெரிவித்துள்ளது.

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்
சூரியன் பூமியை விழுங்க போகிறதா? எப்போது இது நிகழும்? - அச்சமூட்டும் அறிவியல்

டி20 உலககோப்பை

கடந்த அக்டோபர் 17ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கிய 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது. இரு குழுக்களாக மொத்தம் 12 அணிகள் தலா 5 போட்டிகளில் விளையாடி அதிக புள்ளிகளுடன் இரு குழுக்களிலிருந்தும் தலா 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் படு மோசமான தோல்வியை தழுவியது இந்தியா.

இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி, ஆரவாரமில்லாமல், பாகிஸ்தானை வீழ்த்தி இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது. 2007ல் தோனி கோப்பையை வென்ற பிறகு, 20ஓவர் உலகக்கோப்பையை வென்ற இரண்டாவது விக்கெட் கீப்பர் கேப்டன் ஆனார் இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர்.

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்
வர்த்தக பற்றாக்குறையில் தவிக்கிறதா இந்தியா : பாதிப்புகள் என்ன? - விரிவான தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com