வர்த்தக பற்றாக்குறையில் தவிக்கிறதா இந்தியா : பாதிப்புகள் என்ன? - விரிவான தகவல்

ஏற்றுமதியை விட அதிகமான இறக்குமதிகள், பொருளாதார வல்லுநர்களின் கூற்றுப்படி, வேலை வாய்ப்பு சந்தையைப் பாதிக்கிறது மற்றும் வேலையின்மை அதிகரிப்பிற்கு வழிவகுக்கிறது.
trade
trade Twitter
Published on

இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை ஜூலை மாதத்தில் 31.02 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் பதிவாகியிருந்த $10.63 பில்லியன் வர்த்தகப் பற்றாக்குறையிலிருந்து இது மூன்று மடங்கு அதிகமாகும்.

வர்த்தக பற்றாக்குறை என்றால் என்ன?

எளிமையாகச் சொன்னால், வர்த்தகப் பற்றாக்குறை அல்லது எதிர்மறை வர்த்தக சமநிலை (BOT) என்பது ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையே உள்ள இடைவெளி. ஒரு நாட்டில் ஏற்றுமதிக்காகச் செலவிடப்படும் பணத்தை விட இறக்குமதிக்காகச் செலவிடப்படும் பணம் அதிகரித்தால், வர்த்தக பற்றாக்குறை ஏற்படுகிறது.

இது பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகள் மற்றும் சர்வதேச பரிவர்த்தனைகளை உள்ளடக்கிக் கணக்கிடப்படலாம். வர்த்தக பற்றாக்குறைக்கு எதிரானது வர்த்தக உபரி. அதாவது இறக்குமதிக்குச் செலவிடப்படும் பணத்தை விட ஏற்றுமதிக்குக் கிடைக்கும் பணம் அதிகரித்தால் அது வர்த்தக உபரியாக மதிப்பிடப்படுகிறது.

வர்த்தக பற்றாக்குறைக்கு என்ன காரணம்?

இதற்குப் பல காரணிகள் உள்ளன. அவற்றில் ஒன்று உள்நாட்டில் சில பொருட்கள் உற்பத்தி செய்ய முடியாமல் இருக்கும் (சான்றாக கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய்). அப்படியானால், அவை இறக்குமதி செய்யப்பட வேண்டும். இதனால் நாட்டின் வர்த்தகத்தில் ஏற்றத் தாழ்வு ஏற்படுகிறது. பலவீனமான நாணயமும் ஒரு காரணமாக இருக்கலாம். ஏனெனில் இது வர்த்தகத்தை விலையுயர்ந்ததாக ஆக்குகிறது. பலவீனமான நாணயம் என்பது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதைக் குறிக்கிறது. அதாவது ஒரு டாலருக்கு நீங்கள் ஏற்கனவே கொடுத்து வந்த ரூபாய்களை விட அதிக ரூபாய்களைக் கொடுக்க வேண்டியிருந்தால் அது வீழ்ச்சி.

trade
இந்திய ரூபாய் ஏன் சரிகிறது? இதனால் நமக்கு ஏற்படும் ஆபத்துகள் என்ன?

இது ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்குத் தீமையா?

வர்த்தக பற்றாக்குறை அதிகரித்தால், ஒரு நாட்டின் ஜிடிபி - மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும். அதிக வர்த்தகப் பற்றாக்குறை உள்ளூர் நாணயத்தின் மதிப்பைக் குறைக்கலாம்.

ஏற்றுமதியை விட அதிகமான இறக்குமதிகள், பொருளாதார வல்லுநர்களின் கூற்றுப்படி, வேலை வாய்ப்பு சந்தையைப் பாதிக்கிறது மற்றும் வேலையின்மை அதிகரிப்பிற்கு வழிவகுக்கிறது. சான்றாக அதிக செல்பேசிகள் இறக்குமதி செய்யப்பட்டு உள்நாட்டில் உற்பத்தி குறைவாக இருந்தால், அந்தத் துறையில் உள்ளூர் வேலைகள் குறைவாக இருக்கும்.

trade
கெளதம் அதானி Vs முகேஷ் அம்பானி: இந்திய 5ஜி சந்தையை பிடிக்க நடந்த போட்டி - விரிவான தகவல்கள்

எனவே வர்த்தக பற்றாக்குறை என்பது ஒரு நாட்டு மக்களின் வாழ்வை, பொருளாதாரத்தைப் பாதிக்கும் காரணியாக இருக்கிறது. பற்றாக்குறை அதிகரிக்க அதிகரிக்க நெருக்கடியும் அதிகரிக்கும். இலங்கையில் இப்படித்தான் பற்றாக்குறை மிகவும் அதிகரித்து நெருக்கடி ஏற்பட்டது. இலங்கை நாணயத்தின் மதிப்பு வீழ்ந்து, அன்னிய செலாவணி கலியாகி பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

இந்தியா தற்போது அந்த நெருக்கடியின் துவக்கத்தில் உள்ளது. இது சரியாகுமா முற்றுமா என்பதைப் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

trade
இலங்கை : இன்றைய நெருக்கடிக்கு 5 முக்கிய காரணங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com