அதிமுகவில் இணைந்தார் காயத்ரி ரகுராம்!

தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தனிப்பட்ட முறையில் அண்ணாமலையையும் விமர்சித்துவந்தார் காயத்ரி ரகுராம். இதனால் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக தலைமை அறிவித்தது.
அதிமுகவில் இணைந்தார் காயத்ரி ரகுராம்!
அதிமுகவில் இணைந்தார் காயத்ரி ரகுராம்!Twitter
Published on

நடிகையும், அரசியல்வாதியுமான காயத்ரி ரகுராம் இன்று அதிமுகவில் இணைந்தார்.

அரசியல் மீதான ஆர்வத்தால், காயத்ரி ரகுராம் கடந்த 2014ஆம் ஆண்டு அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பின்னர் 2015ஆம் ஆண்டில் தமிழக பாஜக செயலாளராக காயத்ரி ரகுராம் நியமிக்கப்பட்டார்.

தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வந்த காயத்ரி ரகுராம், கடந்த ஆண்டு தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தனிப்பட்ட முறையில் அண்ணாமலையையும் விமர்சித்துவந்தார். இதனால் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக தலைமை அறிவித்தது.

அதன் பின்னர் சில மாதங்கள் கழித்து பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் கொடுத்த ராஜினாமா கடிதத்தை அந்த கட்சி தலைமை ஏற்றுக்கொண்டது.

அதற்கு பிறகு திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவாக பதிவுகளை பதிவிட்டு வந்தார் காயத்ரி ரகுராம்.

இதையடுத்து, காயத்ரி ரகுராம் திமுக அல்லது விசிகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வேளையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்பு அதிமுகவில் இணைந்தார் காயத்ரி ரகுராம்.

அதிமுகவில் இணைந்தார் காயத்ரி ரகுராம்!
கருணாநிதியின் பேனாவுக்கு சிலை வைக்க காயத்ரி ரகுராம் ஆதரவு - இணையத்தில் வைரலாகும் ட்வீட்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com