கடலுக்கு நடுவே மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேனாவிற்கு சிலை வைப்பதற்கு அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காயத்ரி ரகுராம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் எழுத்தாற்றலையும் அவர் கையெழுத்திட்ட திட்டங்களையும் போற்றும் வகையில் அவரது பேனாவுக்கு நினைவிடம் வைக்க வேண்டும் என அரசு திட்டமிட்டிருந்தது.
இதற்காக சென்னை மெரீனா கடற்கரையை ஒட்டி கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஜனவரி 31 ஆம் தேதி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சியினர் சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், முன்னாள் பாஜக பிரமுகரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் கடலில் பேனா சிலை எழுப்புவது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவு ஒன்றில், "மக்களின் பல லட்சம் வரிப் பணம் ஒரு மாநிலத் தலைவரின் இசட் பிரிவுப் பாதுகாப்பிற்குப் பயன்படுத்தப்படும்போது, தமிழ்நாடு மக்களின் வரிப் பணம் ஜனநாயகத்தைக் குறிக்கும் பேனா சிலைக்கு பயன்படுத்துவது சரிதான்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
இதற்கு முன்னர் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடலுக்குள் பேனா சிலையை கட்டினால் நான் அதை ஒருநாள் உடைப்பேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust