”கவுன்சிலிங்கிற்காக வந்தோம், இப்போ அவார்ட் வாங்குறோம்” கோபி - சுதாகர் நெகிழ்ச்சி!

நீங்கள் கடந்து வந்த பாதையை குறித்து பகிருங்கள் எனக் கேட்டபோது, “கடைசியா கவுன்சிலிங்கிற்காக வந்தோம் அண்ணா யுனிவெர்சிட்டிக்கு, இப்போ அவார்டு வாங்க வந்திருக்கோம்” என்றனர்.
”கவுன்சிலிங்கிற்காக வந்தோம், இப்போ அவார்ட் வாங்குறோம்” கோபி - சுதாகர் நெகிழ்ச்சி!
”கவுன்சிலிங்கிற்காக வந்தோம், இப்போ அவார்ட் வாங்குறோம்” கோபி - சுதாகர் நெகிழ்ச்சி! ட்விட்டர்
Published on

”இதற்கு முன் கவுன்சலிங்கிற்காக வந்தோம்!” அண்ணா பல்கலைக்கழகத்தில் விருது பெற்ற பின் யூடியூபர்கள் கோபி, சுதாகர் பேசியது இணையவாசிகளை கவர்ந்து வருகிறது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் கவுன்சில் சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில், பிரபல தமிழ் யூடியூபர்களான கோபி - சுதாகர் இணைக்கு இன்ஸ்பிரேஷனல் யூத் ஐகான் விருது வழங்கப்பட்டது. இதனை பெற்றுக்கொண்ட பிறகு இவர்கள் பேசியது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது

முதலில் எங்களையும் மதித்து இந்த விருது வழங்கும் விழாவுக்கு அழைத்ததற்கு நன்றி எனக் கூறியவர்கள், பல பெருந்தலைகளுக்கு மத்தியில் நாங்களும் நின்றிருப்பது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது என்றனர்.

“பள்ளியில் படிக்கும்போது இவங்கள மாதிரி வரணும்னு யாரையெல்லாம் பாத்து நெனச்சோமோ, அவங்க இருக்க இடத்துல நாங்க இன்னைக்கு இருக்கோம். சும்மா ஜாலிய ஏதோ பண்ணிட்டு இருக்கறதா தான் நாங்க நெனச்சோம். ஆனா இது இவ்ளோ தூரம் வந்தது சந்தோஷமா இருக்கு, ரொம்ப நன்றி” எனக் கூறினார் கோபி.

அப்போது நீங்கள் கடந்து வந்த பாதையை குறித்து பகிருங்கள் எனக் கேட்டபோது, “கடைசியா கவுன்சிலிங்கிற்காக வந்தோம் அண்ணா யுனிவெர்சிட்டிக்கு, இப்போ அவார்டு வாங்க வந்திருக்கோம்” என்றனர்.

”கவுன்சிலிங்கிற்காக வந்தோம், இப்போ அவார்ட் வாங்குறோம்” கோபி - சுதாகர் நெகிழ்ச்சி!
கரூர் : திருமணம் செய்து கொண்ட உயரம் குறைவான மாற்றுத்திறன் ஜோடி - மணமகன் நெகிழ்ச்சி!

சென்னை தெரியாது, இங்கு வந்த பிறகு எங்கே போவதென்று தெரியாது. அட்ரஸ் இல்லாமல் வந்து எங்களுக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளோம். தடங்கல்களை தாண்டி வந்தால் வெற்றியடையலாம் என்றார் சுதாகர்.

இவர்கள் பேசிய இந்த வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

கோபி மற்றும் சுதாகர் ஜோடியை தெரியாதவர்கள் இல்லை. இன்ஜினியரிங் பட்டதாரிகளான இவர்கள், சமூகத்தில் நிலவும் பல பிரச்னைகள், வேலையில்லா திண்டாட்டம், நாட்டு நடப்பு, சினிமா, அரசியல், கொரோனா என தங்களது யூடியூப் சேனலில் நகைச்சுவையாக கேலி செய்து வீடியோக்கள் வெளியிடுவார்கள்.

’பரிதாபங்கள்’ என தலைப்பிடப்பட்டிருக்கும் இவர்களது நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

ஆரம்பத்தில் இவர்களை நிராகரித்த மேடைகள், இன்று இவர்களை தாமே முன்வந்து அழைத்து பாரட்டி வருகிறது.

சமீபத்தில் இவர்களது “வடக்கன் பரிதாபங்கள்” இணையவாசிகளிடையே வெகு பிரபலமானது. பல மீம் மெட்டீரியல்களுக்கு இவர்களது வீடியோக்கள் தீனி போட்டு வருகிறது எனலாம்.

”கவுன்சிலிங்கிற்காக வந்தோம், இப்போ அவார்ட் வாங்குறோம்” கோபி - சுதாகர் நெகிழ்ச்சி!
Leo : “லோகேஷ் நெற்றியில் நான் முத்தமிட்டேன்” - சென்னை திரும்பிய மிஷ்கின் நெகிழ்ச்சி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com