கள்ளக்குறிச்சி மாணவி மறு உடற்கூறாய்வில் தந்தை உடனிருக்கலாம் - உயர் நீதிமன்றம்

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி போராட்டங்களும் கலவரமும் வெடித்த நிலையில், மாணவியின் மறு உடல்கூறாய்விற்கு அவரது தந்தையும் உடன் இருக்கலாம் என தெரிவித்துள்ளது உயர் நீதிமன்றம்
kallakurichi protest
kallakurichi protestTwitter
Published on

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: மறு உடற்கூறாய்வில் தந்தை உடனிருக்க அனுமதி

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் படித்த மாணவியின் மர்ம மரணம் தொடர்பாக பெரும் கலவரம் வெடித்தது.

கலவரத்தின் காரணமாக 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாணவியின் மறு உடற்கூராய்வுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடற்கூராய்வின்போது தங்கள் வக்கீலுடன் மாணவியின் தந்தை உடனிருக்கலாம் எனத் தெரிவித்திருக்கிறது.

தொடங்கியது ஜனாதிபதி தேர்தல்: வாக்களித்தார் பிரதமர் மோடி


தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதிக்கான தேர்தலில் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. நாடு முழுவதும் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வாக்குச்சீட்டு முறையில் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்கின்றனர். எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள தலைமை செயலகத்தில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

543 மக்களவை எம்.பி.க்களும், 233 மாநிலங்களவை எம்.பி.க்களும் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அதன்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி பா.ஜ.க கூட்டணி வேட்பாளராகத் திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குபதிவினை பிரதமர் மோடி செலுத்தினார். அவரைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

புதிய ஜி.எஸ்.டி வரி விதிப்பு இன்றுமுதல் அமலுக்கு வருகிறது


கடந்த மாதம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. விதிக்கவும், சில பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. விகிதமும் மாற்றியமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த புதிய வரி விதிப்பு, இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

பாக்கெட் உணவுகள், முக்கியமாக பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மற்றும் லேபிள் ஒட்டி விற்கப்படும் இறைச்சி மீன், பனீர், தேன், உலர்ந்த காய்கறிகள், கோதுமை மாவு மற்றும் பிற தானியங்கள், தயிர் உள்ளிட்ட பால் பொருட்கள் ஆகியவற்றுக்கு 5 சதவிகித ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டிருக்கிறது.

முட்கரண்டி, ஸ்கிம்மர், கேக்- சர்வர், எல்.இ.டி. விளக்குகள், மை, வெட்டுகத்தி, பேப்பர் கத்தி, பென்சில் ஷார்ப்னர், கரண்டி, வரையும் கருவிகள் போன்ற பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. 12-ல் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

இந்தியா vs இங்கிலாந்து : ரிஷப் பன்ட் சதம், தொடரை வென்ற இந்திய அணி

இங்கிலாந்து - இந்தியா இடையே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. முதல் 2 போட்டிகளில் தலா 1 வெற்றியுடன் இரு அணிகளும் சமநிலையிலிருந்தன.

இந்நிலையில் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 259 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 261 ரன்கள் எடுத்து போட்டியையும் தொடரையும் வென்றது. இந்த டிசைடர் போட்டியில் அதிகபட்சமாக ரிஷப் பன்ட் 125 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தார்

kallakurichi protest
MS Dhoni : தசாப்த கால பயணம், தளராத நம்பிக்கை - 'தல தோனி' இந்தியாவுக்கு செய்தது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com