சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2022 - 2023: நிதி பற்றாக்குறையில் சென்னை? - விரிவான தகவல்கள்

இந்த அறிக்கையில் 2022-2023-ஆம் நிதியாண்டின் வருவாய் தலைப்பில் வரவு ரூ.2,824.77 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.3,613.35 கோடியாகவும், மூலதன வரவு ரூ.2,528.80 கோடியாகவும், மூலதனச் செலவு ரூ.2,510.24 கோடியாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேயர் ஆர்.பிரியா ராஜன்
மேயர் ஆர்.பிரியா ராஜன்Twitter
Published on

சென்னை மாநகராட்சியில் 6 ஆண்டுகளுக்குப் பின்பு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிதாகப் பதவியேற்ற மேயர் பிரியா ராஜன் தலைமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

காலை 10 மணி அளவில் பட்ஜெட் தாக்கல் தொடங்கியது. அதிமுக கவுன்சிலர்கள் சொத்துவரி உயர்வு குறித்து பேச அனுமதி கோர, பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் அனுமதி வழங்கப்படும் என மேயர் கூறினார். தொடர்ந்து சலசலப்பு ஏற்படுத்திய அதிமுக கவுன்சிலர்கள் அவையிலிருந்து வெளியேறினர்.

பள்ளிகளுக்கான அறிவிப்புகள்

சென்னை பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகளை காணலாம்.

  • சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தப் பாலினக் குழுக்கள் அமைக்கப்படும்.

  • 70 பள்ளிகளில் இணைய இணைப்பு வழங்க ரூ.1.86 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

  • 281 மாநகராட்சி பள்ளிகளில் 40 லட்சம் செலவில் கல்விக் கண்காட்சிகள் நடத்தப்படும்.

  • 72 லட்சம் மாணவர்களுக்கு 7.50 கோடி செலவில் சீருடை வழங்கப்படும்.

  • நிர்பயா நிதி மூலம் 23.66 கோடியில் சானிட்டரி நாப்கின் வழங்கப்படும்.

  • பள்ளிகளில் 5.47 கோடியில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும்.

உள்ளிட்ட கல்வி சார்ந்த அறிவிப்புகள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சிTwitter

திடக் கழிவு மேலாண்மை மற்றும் முக்கிய அறிவிப்புகள்

  • பெண் கவுன்சிலர்கள் தங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்யப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

  • கவுன்சிலர்களுக்கான நிதி 30 லட்சத்திலிருந்து 35 லட்சமாக உயர்த்தப்பட்டது. 200 கவுன்சிலர்களுக்கு 70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. - இந்த அறிவிப்பு வெளியானதும் கவுன்சிலர்கள் ஆராவாரம் செய்தனர்.

  • மறுசுழற்சி செய்ய முடியாத 2,600 மெட்ரிக் டன் குப்பைகளைப் பதப்படுத்தி, சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்புவது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும்

  • 54,000 மெட்ரிக் டன் தேங்காய் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும்.

  • திடக்கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி மூலம் கிடைக்கும் வருவாய் அனைத்தும் துப்புரவுப் பணியாளர்களுக்குக் கொடுப்பனவுகளாக விநியோகிக்கப்படும்.

  • மாதவரத்தில் பயோ கேஸ் ஆலை விரைவில் திறக்கப்படும்.

  • சென்னையில் தெருநாய் தொல்லையை குறைக்க நாய் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்க ரூ.80 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • கொசு தொல்லைக்கு லார்விசைடு தெளிக்க ட்ரோன்கள் வாங்க ரூ.4.62 கோடி ஒதுக்கீடு

உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

மேயர் ஆர்.பிரியா ராஜன்
Chennai Hangout Spots: சென்னையில் உங்க வீக் எண்டை கழிக்க சில இடங்கள்
  • மாற்றுத்திறனாளிகளுக்காகக் கடற்கரையில் நிரந்தர பாதை அமைக்கும் பணிக்கு ரூ.1.14 கோடி பெறப்பட்டுள்ளது; இந்த பணிகள் துவங்கப்பட்டு 2 மாத காலத்திற்குள் முடிக்கப்படும்

  • சென்னை மாநகர் முழுவதும் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுப் பராமரிக்கப்படும். சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

நிதி தட்டுப்பாடு

இந்த அறிக்கையில் 2022-2023-ஆம் நிதியாண்டின் வருவாய் தலைப்பில் வரவு ரூ.2,824.77 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.3,613.35 கோடியாகவும், மூலதன வரவு ரூ.2,528.80 கோடியாகவும், மூலதனச் செலவு ரூ.2,510.24 கோடியாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் சென்னை மாநகராட்சி 770 கோடி நிதி பற்றாக்குறையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேயர் ஆர்.பிரியா ராஜன்
Chennai Mayor Priya Rajan : சென்னையின் புதிய இளம் மேயர் - யார் இந்த பிரியா ராஜன் ?

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com