பைலாகுப்பே: தமிழகத்துக்கு அருகில் ஒரு புத்த சாம்ராஜியம் - இங்கு Inner Peace நிச்சயம்!

பைலாகுப்பே இயல்பாகவே அமைதியான இடமாகும். இந்த நிசப்தத்துடன் புத்த பிச்சுகளும் பிரார்த்தனை சத்தமும், பாடல்களும் இணையும் போது மனம் இன்னும் அமைதியாகும்.
பைலாகுப்பே: தமிழகத்துக்கு அருகில் ஒரு புத்த சாம்ராஜியம் - இங்கு Inner Peace நிச்சயம்!
பைலாகுப்பே: தமிழகத்துக்கு அருகில் ஒரு புத்த சாம்ராஜியம் - இங்கு Inner Peace நிச்சயம்!Twitter
Published on

கர்நாடகாவின் மைசூர் அருகே இருக்கும் இடம் தான் பைலக்குப்பே. இந்த இடத்துக்குள் நுழையும் போது இமையமலையைத் தாண்டி திபெத்துக்குள் சென்றுவிட்டதுப் போல தோன்றலாம்.

அந்த அளவு இங்கு புத்த மதம் பரவலாக இருக்கிறது. இங்குள்ள கோல்டன் டெம்பிளில் 50,000க்கும் மேற்பட்ட திபெத்தியர்களும் ஆயிரக்கணக்கான புத்த பிச்சுகள் வசிக்கின்றனர்.

புத்த மதத்தில் மகாயனா, கரவாடா, வஜ்ராயனா என மூன்று வகைகள் இருக்கின்றன. இவற்றுள் மகாயனாவுக்கும் வஜ்ராயனாவுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

1950களில் சீனாவின் ஆக்கிரமிப்பு காரணமாக தலாய்லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதன் விளைவாக இந்தியாவில் புத்தமதம் மறுமலர்ச்சி பெற்றது. பைலாகுப்பேவில் உள்ள இந்த கோவிலும் கூட தலாய்லாமாவால் திறந்துவைக்கப்பட்டது.

இந்த இடம் பொதுவாக சுற்றுலாப்பயணிகளுக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. சரியான நேரத்தில் வந்தால் இங்கு நடக்கும் புத்த சடங்குகளையும், கலை நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம். மடத்தில் பிராசதமும் கிடைக்கும்.

பைலாகுப்பே இயல்பாகவே அமைதியான இடமாகும். இந்த நிசப்தத்துடன் புத்த பிச்சுகளும் பிரார்த்தனை சத்தமும், பாடல்களும் இணையும் போது மனம் இன்னும் அமைதியாகும்.

இந்தியாவில் எத்தனையோ மதங்கள் இருந்தாலும் சிறுபான்மை மதமாக இருக்கும் புத்தம் தலைத்தோங்கியிருக்கும் இடமாக பைலாகுப்பே இருக்கிறது.

இந்த பைலாகுப்பேவில் எந்த ஆராவாரமும் அலப்பறைகளும் இல்லாமல் இதமானதொரு புத்தாண்டு எப்படி கொண்டாடப்படுகிறது என்பதை கீழே உள்ள வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

பைலாகுப்பே: தமிழகத்துக்கு அருகில் ஒரு புத்த சாம்ராஜியம் - இங்கு Inner Peace நிச்சயம்!
மிசோரம்: இந்தியாவிலேயே மகிழ்ச்சியான மாநிலம் - ஏன் தெரியுமா?
பைலாகுப்பே: தமிழகத்துக்கு அருகில் ஒரு புத்த சாம்ராஜியம் - இங்கு Inner Peace நிச்சயம்!
Travel : ஆரவல்லி முதல் கருப்பு மலை வரை - உலகின் பழமையான மலைகள் குறித்து தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com