அதிமுக உடன் கூட்டணி வைத்தால் பதவியை ராஜினாமா செய்வேன் - அண்ணாமலை ஆவேசம்

தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்குரிய, வெற்றி பெற வைப்பதற்குரிய உத்திகள் என்னிடம் இருக்கின்றன. என் ஸ்டைலில் செயல்பட முடியாத போது நான் ராஜினாமா செய்து விட்டு ஒரு தொண்டனாகவே இருப்பேன் என்று கூறினார்.
அண்ணாமலை
அண்ணாமலைTwitter
Published on

மக்களவை தேர்தலில் அதிமுக உடன் பாஜக கூட்டணி வைத்தால் பாஜக மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அண்ணாமலை.

தமிழ்நாட்டில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது. ஓபிஎஸ் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டத்திலிருந்து பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் அதிமுகவில் இணைவது வரை பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

அண்ணாமலை
அண்ணாமலைTwitter

சமீபத்தில் கூட பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல்குமார் அதிமுகவில் இணைந்தார். மேலும் நிர்மல்குமார் தலைமையில் ஏராளமான பாஜகவினர் அதிமுகவில் இணைந்தனர்.

அடுத்தடுத்து அதிமுகவில் பல்வேறு பாஜக நிர்வாகிகள் இணைவதால் இரு கட்சிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்தது.

இதனையடுத்து அண்ணாமலை "ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு" என்று கூறினார்.

அதே நேரத்தில் அதிமுக நிர்வாகிகளும் பாஜக நிர்வாகிகளும் கூட்டணி நீடிப்பதாகவே கூறி வருகின்றனர். 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலை அதிமுகவும் பாஜகவும் இணைந்து எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாநிலத்தலைவர் அண்ணாமலை தற்போது கூறியிருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்திருக்கிறது.

அண்ணாமலை
திமுகவிற்கு சவால் விடும் அண்ணாமலை! ட்விட்டரில் டிரெண்டாகும் #NorthIndians; என்ன நடக்கிறது?
Annamalai
Annamalai Twitter

தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

அதில் பேசிய அண்ணாமலை,

தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். அதிமுக உடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். பாஜகவை வளர்த்தெடுக்கத்தான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்க வேண்டும் என்றார்.

தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்குரிய வெற்றி பெற வைப்பதற்குரிய உத்திகள் என்னிடம் இருக்கின்றன. என் ஸ்டைலில் செயல்பட முடியாத போது நான் ராஜினாமா செய்து விட்டு ஒரு தொண்டனாகவே இருப்பேன் என்று கூறினார்.

அண்ணாமலை
ADMK: EPS முதல் அண்ணாமலை வரை; ஓ பன்னீர் செல்வத்தை காலி செய்த 6 பேர் - ஒரு ஷாக்கிங் லிஸ்ட்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com