

சுமார் 1 கோடி ரூபாய்க்கும் மேல் அபராதம் வசூலித்து நாடு முழுவதிலும் இருந்து அதிக அபராதத் தொகை வசூலித்த முதல் பெண் டிக்கெட் செக்கர் என்ற பெருமையை அடைந்திருக்கிறார் தலைமை டிக்கெட் பரிசோதகர் ரோசலின் ஆரோக்கிய மேரி என்ற பெண்.
ரயிலில் பயணிக்கும்போது பலரும் முறையாக பயணச்சீட்டை பெறாமல் பயணிக்கத்தான் செய்கின்றனர். இவர்கள் பிடிப்பட்டால், நமது பயணச்சீட்டு கட்டணத்தோடு குறைந்த பட்சமாக ரூ.250 அபராதமாக வசூலிக்கப்படும்.
இந்நிலையில், 2022-23ஆம் ஆண்டில் அதிக அபராத கட்டணத்தை வசூலித்த டிக்கெட் பரிசோதகரை பாராட்டி சமீபத்தில் ரயில்வே அமைச்சகம் ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தது. அதில் ரோசலின் ஆரோக்கிய மேரி என்ற பெண்ணை பாராட்டி பதிவிட்டிருந்தனர்.
”முழுமையான அர்ப்பணிப்புடன் தனது கடமையை ஆற்றிய ரோசலின் ஆரோக்கிய மேரி, இந்திய ரயில்வேவின் டிக்கெட் பரிசோதகர்களில் அதிக அபராதம் வசூலித்த முதல் பெண் பரிசோதகர் ஆனார்.
இவர் 2022-23ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.1.03 கோடி அபராதமாக முறையாக பயணச்சீட்டு பெறாமல் பயணித்தவர்களிடம் இருந்து வசூலித்திருக்கிறார்” என பாராட்டியிருந்தது ரயில்வே துறை.
இந்த ட்வீட்டை பார்த்த பலரும் ரோசலின் மேரியின் கடமையுணர்ச்சியை பாராட்டி வருகின்றனர். இவரை போன்று எல்லா பெண்களும் இருந்தால், நமது தேசம் மேலும் வலுப்பெறும் என தெரிவித்திருந்தனர்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust