தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள பகுதிகளில் உள்ள பழங்குடியினர் தேங்காய் பூவை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த தேங்காய் பூ, கல்லீரல், வாய் புண்கள் மற்றும் வாயு பிரச்னைகளை குணப்படுத்தும் என்று நம்புகின்றனர். உடல் உஷ்ணம், சிறுநீரகக் கற்கள், சளி, நுரையீரல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கவும் இது உதவியாக இருப்பதாக நம்புகின்றனர்.
பொள்ளாச்சியில் இருந்து தேங்காய் பூ வரவழைக்கப்பட்டு தேனி மாவட்டம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. பொள்ளாச்சியில் இருந்து தேங்காய் ரூ.70க்கு கொள்முதல் செய்யும் வியாபாரிகள், தேங்காய் ஒன்று ரூ.80 முதல் ரூ.100 வரை மக்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
தென்னை மரத்தில் பறிக்கப்பட்ட தேங்காய்யை மீண்டும் மண்ணில் 90 நாட்கள் வரை புதைத்து வைக்கின்றனர். 90 நாட்களுக்குப் பிறகு, தேங்காய்க்குள் ஒரு பூ உருவாகிறது. அதன் பின்னர் தேங்காய் பூ விற்பனைக்கு வருகிறது.
மண்ணில் புதைந்து கிடக்கும் காலத்தில் தென்னையின் அனைத்து சத்துக்களையும் பூ உறிஞ்சுகிறது. தென்னை மரக்கன்றுகளை பிடுங்காமல் 7 நாட்கள் வரை பயன்படுத்தலாம் என வியாபாரிகள் கூறுகின்றனர்.
இந்த தேங்காய் பூக்களில் நார்ச்சத்து, தாதுக்கள், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நிறைந்துள்ளன.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews